அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியரின் உயிரை காப்பாற்றிய ஐபோன்!

நபர் ஒருவரின் உயிரை நொடிப்பொழுதில் ஐபோன் காப்பாற்றிய த்ரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 43 வயதான நபர் காரில் இருந்து தனது வீட்டில் இறங்கியுள்ளார். அப்போது ஒரு நபர் தனது கையில் அம்புடன் நின்றிருப்பதை பார்த்து அதனை தனது ஐபோனில் காணொளி எடுத்துள்ளார். ஆனால், பாய்ந்து வந்த அம்பு, இவர் கையில் இருந்த ஐபோனை துளைத்து 2 இன்ச் வரை வெளிவந்திருந்தது. ஸ்கிரீன்கார்டு கழன்று வந்தது. அம்பு தாக்கியதில் போன் கையிலிருந்து பறந்து ...

Read More »

அவுஸ்திரேலிய தீவிரவாதியின் தாய் தலைமறைவு!

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் தாயும் சகோதரியும் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், முதன்முறையாக அவனது தாயின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரெண்டன் என்னும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாதி, நியூஸிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய செய்திகள் அவனது தாயாராகிய ஷாரனுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். உடனடியாக பள்ளியை விட்டு புறப்பட்ட அவர், தனது மகளுடன் மறைவிடம் ஒன்றிற்கு சென்றுவிட்டதாக தெரியவந்தது. பின்னர் அவரும் பிரெண்டனின் சகோதரியான லாரனும் வசித்த வீடுகளில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடனிருப்பதற்காக ...

Read More »

ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கி.மீ.க்கு அப்பால் உள்ள தீவுக்கு அனுப்பப்படும் 57 அகதிகள்!

மருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருக்கிறார். தனது கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களை மனுஸ் மற்றும் நவுருத்தீவுப்பகுதிகளில் தடுத்து வைத்திருக்கின்றது ஆஸ்திரேலிய அரசு. அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடும் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு மட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தமாக மாறியது. ...

Read More »

அவுஸ்திரேலிய அணியினருடன் வோர்னர் ஸ்மித் உணர்ச்சிகர சந்திப்பு!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சிக்காக ஒரு வருட தணடனையை அனுபவித்த அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் மீண்டும் அவுஸ்திரேலிய அணியினருடன் இணைந்துகொண்டுள்ளனர் பாக்கிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிற்காக துபாய் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணியினரை சந்தித்துள்ள டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்களுடன் உரையாடியுள்ளனர் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் கலந்துரையாடினார்கள் பல கேள்விகளிற்கு பதில் அளித்தார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அற்புதமாகயிருந்தது என தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அணியிலிருந்து  விலகயிருந்தோம் என்ற எண்ணமே ...

Read More »

அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டை தாக்குதல்!

குவீன்ஸ்லந்தைச் சேர்ந்த செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங் (Fraser Anning), இளைஞர் ஒருவரைக் குத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த நேரிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 49 பேர் மாண்ட நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அந்த அவுஸ்திரேலிய செனட்டர் வெளியிட்ட கருத்துகள் உலகளவில் குறைகூறப்பட்டன. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செனட்டர் மீது முட்டை ஒன்றை வீசினார். பதிலுக்கு செனட்டர் அவர் முகத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை குத்தியபோது பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டார். நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்கள் ...

Read More »

அவுஸ்திரேலியப் பேராயருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அவுஸ்திரேலியப் பேராயர் ஜார்ஜ் பெல்லுக்குத் (George Pell), தேவாலயப் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றவாளி என ஆக மூத்த கத்தோலிக்க அதிகாரி பெல் அறிவிக்கப்பட்டுள்ளார். தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறிவரும் அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

Read More »

நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி!

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தேடப்படும் இலங்கை இளைஞன்!

இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேர்த் மாநகரின் Langford பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக காவல் துறையினர்  தகவல் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, 28 வயதான ...

Read More »

நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய நியுசிலாந்து பிரதிநிதிகளுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றிய அறிவித்தலை அவுஸ்திரேலிய நியுசிலாந்து நாடுகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுபற்றிய விபரங்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம். தேர்தல் ஊடக அறிக்கை ௦1 AUS Nomination Form TAMIL AUS Nomination Form ENGLISH   Key dates for the Election are: 10 March – Nominations Open 24 March – Nominations Close 25 March – Candidate list is announced 26 ...

Read More »

கடன் அட்டையை வெறுக்கும் அவுஸ்திரேலியர்கள்!

அவுஸ்திரேலியாவில் கடனட்டை பாவனை அதிர்ச்சிதரும் வகையில் சரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தரவுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மாத்திரம் சுமார் ஏழு லட்சத்து 81 ஆயிரம் அவுஸ்திரேலியர்கள் கடனட்டை பழக்கத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஐம்பது லட்சம் அவுஸ்திரேலியர்கள் கடனட்டைகளை பயன்படுத்திவருகின்றது. இந்த நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்தப்பாரிய மாற்றத்திற்கமைய மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் பேரை கடனட்டைப்பாவனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் 330 பில்லியன் டொலர்களுக்கு கடனட்டைகளால் மாத்திரம் நுகர்வோர் கொள்முதல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. ...

Read More »