அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி ஏற்பு!

சுதந்திரா கட்சியின் ஸ்காட் மோரிசன் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் தேர்தலில் வென்று 11 நாட்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி ஏற்றுக் கொண்டார். இவருடன் மைக்கேல் மெக்கார்மாக்கும் துணை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் அமைச்சர்களுடனான சந்திப்பில் மோரிசன் பேசும்போது,” மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பணி செய்யக் கூடிய பாக்கியத்தை பெறக் கூடிய வாய்ப்பை அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நாம் அவர்களுக்காக சிறப்பாக ...

Read More »

விக்டோரியாவை உலுக்கிய கோர விபத்துக்கள்! நால்வர் பலி!

விக்டோரியாவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்களில் ஒன்றில் பெண்ணொருவரை காரினால் மோதிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ardeer பகுதியில் Ballarat வீதியில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை, Mount Eliza பகுதியில் வீதியில் எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் யூட் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த ஓட்டுனரும் அவருடன் சென்றவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ...

Read More »

அவர் அழகானவர், வலிமையானவர்: அவுஸ்திரேலிய பெண்ணின் வித்தியாசமான கணவர்!

சமீபத்தில் திருமணமான அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தனது கணவர் அழகானவர், வலிமையானவர் என வர்ணிக்கிறார்… அந்த கணவர் யார் தெரியுமா? பிரான்சிலுள்ள ஒரு பாலம்தான் அவரது கணவர். ஆம்! பிரான்சிலுள்ள சாத்தானின் பாலம் என்று பொருள்படும் Le Pont du Diable என்ற பாலத்தைத்தான் அந்த பெண் திருமணம் செய்துள்ளார். சிட்னியைச் சேர்ந்த ஜோடி ரோஸ், தென் பிரான்சிலுள்ள Tech நதியின் மேல் அமைந்துள்ள பாலத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரான்சுக்கு சுற்றுலா செல்லும்போது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த பாலத்தின்மீது ஜோடிக்கு காதல் ...

Read More »

ஆஸ்திரேலியா மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்!

ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்கான வாய்ப்பை சபாநாயகரின் அனுமதியுடன் ஊடகங்களுக்கு பெற்றத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிவில் அமைப்புக்களின் பிரநிதிகள் சிலரை அண்மையில் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழுவின் குறுக்கு விசாரணைகளை கேட்டல், அவற்றுக்கு வழங்கப்படும் பதில்களை முழுமையாக சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதன் ஊடாக ...

Read More »

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்!

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...

Read More »

இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

சவுதாம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது. சவுதம்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது. காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ...

Read More »

அவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது!

அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக நீண்டகாலம் சந்தையில் கோலோச்சிய Toyota Tarago 36 வருடங்களுக்கு பிறகு விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Toyota நிறுவனம் இந்த விடயம் அறிவித்துள்ளது. 1983 இல் சந்தைக்கு வந்த இவ்வாகனம் உடனடியாகவே அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரியதாக மாறியது. 80 – 90 களில் பெரிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக வசீகரித்துக்கொண்ட – 12 ஆசனங்களைக்கொண்ட – Toyota Tarago சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த வாகனத்தின் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது!

இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டம் நடத்திவரப்படுகின்றது. லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளார்கள். பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்கக்கோரும் மின்னஞ்சல்களையும் வேண்டுகோள்களையும் தொடர்ந்தும் அனுப்பிவருவதாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை ...

Read More »

எதிர்பாரா விதமாக தங்கக் கட்டி ஒன்றை கண்டுபிடித்த அவுஸ்திரேலியர்!

அவுஸ்திரேலியாவின் கல்கூர்லி (Kalgoorlie) பகுதியை சேர்ந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. தங்கச் சுரங்கத்திற்கு அருகே உலோகம் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு 100,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டி ஒன்றை குறித்த நபர் தோண்டியெடுத்துள்ளார். பொழுதுபோக்குக்காக எதையோ தேடிச் செல்லும் போது குறித்த எதிர்பாரா விதமாக அந்தப் பரிசு கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அவுஸ்திரேலியாவில் தோண்டியெடுக்கப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது. அதனால் அங்கு அவ்வப்போது சிறு சிறு தங்கக் கட்டிகள் மக்களுக்குக் கிடைப்பது வழக்கம் ...

Read More »

அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளையடுத்து ஆறு அகதிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனுஸ் தீவுகளிலும் நவ்றுவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மனுஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான நோய்வாய்ப்பட்டுள்ள நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார். சூடானை சேர்ந்த அகதி அப்துல் அசீஸ் முகமட் இந்த விடயத்தை தனது டுவிட்டரில் பதிவு ...

Read More »