அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை ‌ ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் – பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுளின் ...

Read More »

குயின்ஸ்லாந்தில் அச்சத்தில் வாழ்ந்துவரும் பெண்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழும் பெண் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன் வீட்டில் ஏசி ஆன் செய்யப்பட்டிருப்பதையும், வீட்டின் பின் கதவு திறந்திருப்பதையும், சமையல் அறையில் பாதி சமைக்கப்பட்ட நிலையில் மாமிசம் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுள்ளார் ஏற்கனவே Monica Green என்னும் அந்த பெண் தன் வீட்டு பாதுகாப்பு கமெரா ரிப்பேர் ஆகியிருப்பதை கவனித்திருந்தார். வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருக்க, எல்லாம் சேர்ந்து சேர்ந்து திகிலை ஏற்படுத்த, பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் Monica. காவல் துறை  வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கூரைப்பகுதியில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தற்காலிக இணைப்பு விசா!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சுமார் 50 பேரை ஓராண்டு தடுப்புக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு விடுவித்திருக்கிறது. இவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளாவர். ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இந்த அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் குடிவரவுத் தடுப்பிலும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக இணைப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 8 ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து ...

Read More »

கூகுள் நிறுவனம் +ஆஸ்திரேலிய அரசு – முற்றும் மோதல்! காரணம் என்ன?

செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் சட்டத்தை கைவிடாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ளது. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்துள்ளதால் மோதல் முற்றியுள்ளது ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள் இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் ...

Read More »

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொள்ளப்போவதாக எச்சரிக்கை ஏன்?

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொளளப்போவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கூகுள்; முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களிற்கு ரோயல்டி செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தி;ற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள்; இந்த எச்சரிக்கையை வெளியி;ட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சட்டமொன்றை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை என கூகுள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ இயக்குநர் மெல்சில்வா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா இந்த சட்டத்தினை நிறைவேற்றினால் அவுஸ்திரேலியாவில் கூகுள் தேடும் ...

Read More »

ஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மர்ம மனிதர்களால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். இதே திகதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1906 – பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர். * 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது. * 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் ...

Read More »

ஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்

உண்மையான அணி (இங்கிலாந்து) உங்கள் மண்ணில் விளையாடி உங்களை வீழ்த்த இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி வீரர்களும் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கெவின் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் – ரிஷப் பண்ட்

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார். பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது: என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் ...

Read More »

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந்த மேலும் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

Read More »

தமிழர் திருநாள் -2021 அவுஸ்ரேலியா

எம் தமிழர்களின் மிகமுக்கியமான விழாவான தைப்பொங்கலின் சிறப்புக்களை எம் இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், இந்த நாட்டு தமிழ் உறவுகளின் கலாச்சார, கலைச் செழிப்பைக் காட்டும் இனிய பல கலை நிகழ்வுகளையும், எமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் கண்டுகளிக்கவும் இந்தவிழாக்களுக்கு, தமிழ் கலாச்சார உடையில் வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.  

Read More »