Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 21)

அவுஸ்திரேலியமுரசு

ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள்

ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிறிலங்கா  அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார் அங்கிதா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆடுகிறார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் ...

Read More »

ஆரம்பமானது அவுஸ்திரேலிய ஓபன்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரானது இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பான் வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னில் பட்டத்தை வென்ற ஒசாகா, ரோட் லாவர் அரங்கில் நடந்த போட்டியின் முதல் போட்டியில் விளையாடி, அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை 6-1, 6-2 என்ற செட் ...

Read More »

தமிழர் அடக்குமுறைநாள் பேரணி – மெல்பேர்ண்

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடிய வேளையில் அதனை தமிழர் அடக்குமுறை நாள் என பிரகடனப்படுத்தி பல்லின மக்களின் ஆதரவுடன் போராட்டம் மெல்பெர்னில் இன்று நடைபெற்றது. 1948 பெப்ரவரி 4ஆம் நாள் பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறப்பட்ட நிலையில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏனைய ...

Read More »

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக,  இன்று 06-02-2021  சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. சிட்னி பரமட்டா நகரில் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் இளையவர்கள் முதல் மூத்தவர்கள் என பெருமளவான தமிழ் மக்களோடு பல்லின சமூகமக்களும் என பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இளம்செயற்பாட்டாளர் ரேணுகா ...

Read More »

அனைத்து தடுப்பு முகாம்களையும் மூடுங்கள்!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் ஹோட்டல் வெளியே கூடிய அகதிகள் நல ஆர்வலர்கள் தடுப்பில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும், அனைத்து தடுப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற முழக்கங்களுடன் பேரணி நடத்தியிருக்கின்றனர். Campaign Against Racism and Fascism சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட Fanoush மற்றும் Imran என்ற ...

Read More »

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வு

தமிழர்களுக்கான நீதியை கோரி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தொடர் போராட்டம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சிவில் செயற்பாட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை தாயகத்தின் அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் வழங்குகின்றன. குறிப்பாக வடக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை ‌ ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் – பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு ...

Read More »

குயின்ஸ்லாந்தில் அச்சத்தில் வாழ்ந்துவரும் பெண்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழும் பெண் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன் வீட்டில் ஏசி ஆன் செய்யப்பட்டிருப்பதையும், வீட்டின் பின் கதவு திறந்திருப்பதையும், சமையல் அறையில் பாதி சமைக்கப்பட்ட நிலையில் மாமிசம் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுள்ளார் ஏற்கனவே Monica Green என்னும் அந்த பெண் தன் வீட்டு பாதுகாப்பு கமெரா ரிப்பேர் ஆகியிருப்பதை கவனித்திருந்தார். வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருக்க, எல்லாம் சேர்ந்து சேர்ந்து திகிலை ஏற்படுத்த, ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தற்காலிக இணைப்பு விசா!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சுமார் 50 பேரை ஓராண்டு தடுப்புக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு விடுவித்திருக்கிறது. இவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளாவர். ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இந்த அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் குடிவரவுத் தடுப்பிலும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக இணைப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ...

Read More »