அவுஸ்திரேலியமுரசு

மூடி மறைக்கப்படும் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. ...

Read More »

இந்திய மண்ணில் அசத்தினால் சிறந்த அணி அந்தஸ்தை பெறலாம்: ஸ்டீவன் சுமித்

இந்திய மண்ணில் அசத்தினால் உலகின் சிறந்த அணி அந்தஸ்து கிடைக்கும் என்று அவுஸ்ரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் அவுஸ்ரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. தற்போதைய டெஸ்ட் தொடரும் அந்த அணிக்கு யுத்தம் போன்று தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதையொட்டி அவுஸ்ரேலிய ...

Read More »

சிட்னியில் இந்திய உணவுகள்!

A week in India எனும் உணவுத் திருவிழா அண்மையில் சிட்னி Shangri-La Hotel இல் நடைபெற்றது. ஆஸ்திரேலியர்கள் விரும்பி உண்ணும் உணவுவகைகளை இந்திய முறைப்படி சமைத்துக் காட்சிப் படுத்தியிருந்ததுடன் அவ்விடம் இந்தியாவின் மாறுபட்ட கலை கலாசாரங்களால், இசையால், வண்ணங்களால் நிரம்பியிருந்தது. மகேஸ்வரன் பிரபாகரன், பிரபல இந்திய சமையல் நிபுணர் Varun Gujral, மற்றும் சிட்னி Shangri-La Hotel இன் பிரதம சமையல் நிபுணர் Bo Sorensen ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?language=ta

Read More »

அவுஸ்ரேலியா அணியில் கிறிஸ் லைனுக்குப் பதில் பென் டங்க்

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் லைனுக்குப் பதிலாக பென் டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி அவுஸ்ரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 17-ந்திகதி தொடங்குகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் கிறிஸ் லைன் இடம்பிடித்திருந்தார். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடது கை பேட்ஸ்மேன் பென் டங்க் ...

Read More »

அவுஸ்ரேலியப் பிரதமரின் வீட்டருகே குழி

அவுஸ்ரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்புல் வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் குழி ஒன்று உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (7) பெய்த கனத்த மழையாலும் திடீர் வெள்ளத்தாலும் அந்தக் குழி உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது. நடைபாதையில் உருவாகியிருக்கும் அந்தக் குழியால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தனியார் சொத்துக்குச் சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவ்விடத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று நகராட்சியின் தொழில்நுட்பச் சேவை இயக்குநர் தெரிவித்தார்.  

Read More »

அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும்?

அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும் என்று அகதிகள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது. அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு, சிரிய அகதிகளுக்கு தடை, ஏழு முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை உள்ளிட்ட முடிவுகளை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அகதிகள் ஒப்பந்தம் *அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் நவம்பர் 2016 அறிவிக்கப்பட்டது. இது ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டம். *இது ...

Read More »

அவுஸ்ரேலியா தொடரை எதிர்பார்க்கும் ரோகித் சர்மா

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் அவருக்கு டெஸ்ட் தொடரில் சரியான இடம் கிடைக்கவில்லை. கடந்த வருடம் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு, கடைசி போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டார். ...

Read More »

அவுஸ்ரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்ரேலியாவிற்கு அந்த இடத்தை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அவுஸ்ரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்றுள்ளது. மிகத்துள்ளியமான புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்ரேலியா முதல் இடம்பிடித்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் நடைபெற இருந்த 2-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட ...

Read More »

அதிர்ச்சியில் அவுஸ்ரேலிய பிரதமர்!

அவுஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இணைப்பை பாதியிலேயே துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 45 வது அதிபராக டொனல்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் டிரம்ப். அந்த வகையில் அவுஸ்ரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவுஸ்ரேலியாவிடம் தஞ்சம் புகுந்த சிரியா உட்பட மேற்காசிய நாட்டு அகதிகளில் 1,250 பேரை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தது பற்றி பேசியதாக தெரிகிறது. மேலும் அகதிகளை ...

Read More »