சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகள் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்
அவுஸ்திரேலியாவின் முன்னணி நிதி ஆய்வு ஊடகமான (Financial Review) பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவிலிருந்து 1970-களில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கட்டுமான துறையில் செல்வந்தராக திகழும் மகா சின்னத்தம்பி Financial Review பட்டியல்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் 64 ஆவது நபராக இடம்பிடித்துள்ளார். Financial Review பட்டியல்படுத்தியுள்ள குறித்த நிதி ஆய்வு நிறுவனம் இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் மகா சின்னத்தம்பி 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளதுடன்,இவரின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. ...
Read More »ஆஸ்திரேலியாவில் மாறிக்கொண்டே இருக்கும் குடிவரவு விதிகள்?
“இப்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா பெற விண்ணப்பிப்பது சாதாரணமான காரியமல்ல. குடிவரவு விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு விண்ணப்பப் பணிகளுக்கே இடையிலேயே அந்த மாற்றம் நிகழ்கின்றது. ஒரு முறை விண்ணப்பிக்க தகுதியான நபர், அடுத்த முறை தகுதியற்றவராக இருக்கிறார்,” எனத் தெரிவித்திருக்கிறார் Melanie Macfarlane எனும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு முகவர்.
Read More »அகதிகளை காலவரையின்றி சிறைப்படுத்தும் புதிய சட்டம் !- மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை
ஆஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ்நிலை முழுதும் கூட காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்துடையது என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த சட்டத்திருத்தம், ஆஸ்திரேலிய அரசு அகதிகளின் விசாக்களை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதே சமயம், சொந்த நாட்டில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அகதிகளை நாடுகடத்தும் அனுமதியை வழங்க மறுப்பதால், விசா ரத்து செய்யப்பட்ட அகதிகள் காலவரையின்றி சிறைப்படுத்தப்படுவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. குணநலன் அடிப்படையில், பாதுகாப்புக்கு ...
Read More »பயண தடைக்கு பின்னர் இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா தரை இறங்கியது!
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்களை சுமந்து கொண்டு முதல் விமானம் ஆஸ்திரேலியா போய்ச்சேர்ந்தது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் ...
Read More »சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்!
இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன்போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அவர், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்நிறுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
Read More »மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடம்
இந்தியா உறுதியாக இருங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ...
Read More »குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது சாத்தியமா?
உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுக் குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது சாத்தியமற்ற நிலையிலேயே உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தற்போதைய நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் கணிப்பின் படி, 2022ம் ஆண்டு இடைப்பகுதியிலிருந்தே தற்காலிக குடியேறிகளும் நிரந்தர குடியேறிகளும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களைப் பொறுத்தமட்டில் இந்தாண்டின் பிற்பகுதியிலிருந்து சிறு சிறு கட்டங்களாக மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு உள்ளது. அத்துடன், ஆஸ்திரேலிய அரசு சமர்பித்துள்ள 2021-22 நிதிநிலை அறிக்கையில் ஜனவரி 2022 ...
Read More »அச்சத்தில் அகதிகள்….குறுகிய காலத்தில் நேர்காணல்
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலணைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் திடீரென இரண்டு வாரங்களில் நேர்காணல் எனும் அறிவிப்பு ‘போதுமான காலமல்ல’ என அகதிகளின் வழக்கறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பரிசீலணை வேகப்படுத்தப்பட்டுள்ளதனால், அந்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் ஆஸ்திரேலிய உள்துறையுடனான இந்த நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரியுள்ள இந்த அகதிகள் ...
Read More »டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ஆஸ்திரேலியா திட்டம்
மற்ற நாடுகளை விட எல்லையை மூடுவதில் சற்றும் தயங்காத ஆஸ்திரேலியா, வயது வந்த அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றை ஆஸ்திரேலியா வித்தியாசமாக எதிர்கொண்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகளவில் பரவியது போது உடனடியாக நாட்டின் எல்லையை மூடியது. மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்தது. நாடு தழுவிய கொரோனா தொற்று என்பதை முறியடித்தது. தற்போது உருமாறிய கொரோனா 2-வது அலை, 3-வது அலை ...
Read More »