டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ஆஸ்திரேலியா திட்டம்

மற்ற நாடுகளை விட எல்லையை மூடுவதில் சற்றும் தயங்காத ஆஸ்திரேலியா, வயது வந்த அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றை ஆஸ்திரேலியா வித்தியாசமாக எதிர்கொண்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகளவில் பரவியது போது உடனடியாக நாட்டின் எல்லையை மூடியது. மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்தது. நாடு தழுவிய கொரோனா தொற்று என்பதை முறியடித்தது. தற்போது உருமாறிய கொரோனா 2-வது அலை, 3-வது அலை என உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 2-வது அலை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா நாட்டின் எல்லையை முற்றிலுமாக மூடிவிட்டது.
கொரோனா தடுப்பூசி

இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்கிவிட்டுள்ளது. வயது வந்தோருக்கு தற்போது வரை 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையான (வயதுதிற்கு வந்தோர்) 50 லட்சம் பேருக்கும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், 2022 வரை எல்லைகளை திறக்க ஆஸ்திரேலியா தயாராக இல்லை.