இந்தியா உறுதியாக இருங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா வைரசால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வர துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அந்த மின்விளக்கு பிரதிபலிப்பில் ‘இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா உறுதியாக இருங்கள்’ என்று எழுதப்படுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.