அவுஸ்திரேலியமுரசு

சிட்னியில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த விவகாரத்தில் கணவரின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் Rouse Hill பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்தே கடந்த 2013 ஆம் ஆண்டு குல்விந்தர் சிங் தமது மனைவி பர்விந்தர் கவுர் என்பவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்று குல்விந்தர் சிங் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்விந்தர் கவுரிடம் இருக்கும் பணத்திற்காகவே குல்விந்தர் அவரை கொலை செய்துள்ளதாக முன்னெடுக்கப்பட்ட வாதம் உண்மைக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலியாவில் பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை கைது செய்த காவல் துறை  அவரை சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் 5-வது மிகப்பெரிய நகரமான இன்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஆன்ட்ரியாஸ் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த நாடின் ஹின்டர்ஹோல்சர் (19) என்ற இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக நாடின் ஹின்டர்ஹோல்சர், ஆன்ட்ரியாசை பிரிந்து சென்றார். அதன் பிறகு நாடின் ஹின்டர்ஹோல்சர், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மர்மமாக கொல்லப்பட்ட இந்திய பெண்!

அவுஸ்திரேலியாவில் தனது மனைவி கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் கூற்று “மிகவும் சாத்தியமற்றது” என அவருடைய கணவர் கூறியுள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபா அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். அவருடைய திறமையை பார்த்து நிறுவனமும் விசா காலத்தை நீட்டித்து கொடுத்திருந்தது. மார்ச் 7, 2015 அன்று தன்னுடைய கணவர் குமார் உடன், பிரபா செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ...

Read More »

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்க‍ை ஆரம்பம்!

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்ளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 9.00 மணிக்கு வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று 11.30 மணிவரையில் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. அத்துடன்  வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும்  காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிராந்தியா விசாக்கள், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. அதே சமயம், பிராந்திய விசாக்கள் மூலம் PR எனப்படும் நிரந்தர வதிவிடம் கோரி விண்ணப்பிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய பகுதியில் மூன்றாண்டுகள் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரதான நகருங்களுக்கு வெளியே உள்ளவை பிராந்திய பகுதிகளாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், வரும் நவம்பர் மாதம் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கான 2 ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய வந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா (வயது 43). தனது தனிப்பட்ட வாழ்க்கையை இந்தப் பெண் கலைஞர் ரகசியமாக வைத்துள்ளார். ‘விக்’ என்னும் செயற்கை முடி அலங்காரத்துடன், தலைக்கவசம் அணிந்து தன் முகத்தை இவர் மறைத்து வந்தாலும், இவரது பாடல்களை ரசிப்பதற்கென்று அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இவர் ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய ...

Read More »

லசந்த விக்ரமதுங்க படுகொலை! -முன்னாள் ரி.ஐ.டி.பிரதானிகள் இருவருக்கு சிக்கல்!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சிகள் மற்றும் விடயங்களை குறித்த கொலை தொடர்பில்  முன்னர் விசாரணை செய்த ரி.ஐ.டி.எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் இருவர் மறைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரி.ஐ.டி.யின் முன்னாள் பிரதானி பிரதி காவல் துறை மா அதிபர் சந்ரா வாகிஸ்ட மற்றும் அப்போது அந்த  புலனாய்வுப் பிரிவின் உதவி காவல் துறை அத்தியட்சராக இருந்த பிரசன்ன அல்விஸ் ஆகியோர்  இந்த  நடவடிக்கையில் தொடர்புபட்டுள்ளதாக தற்போது லசந்த விக்ரமதுங்க விவகாரத்தை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் ...

Read More »

5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்த இந்திய வம்சாவளி டாக்ஸி ஓட்டுநர்!

ஆஸ்திரேலியாவில் சைக்கிளில் வந்தவரை இடித்து கீழே தள்ளிய வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்தானதை அடுத்து 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குர்பேஜ் சிங் (29), 2017 டிசம்பரில் பிளின்டர்ஸ் தெருவில் இருந்து கண்காட்சி தெருவுக்கு திரும்பும்போது ஒரு சிக்னலில் சைக்கிள் வந்தரை இடித்து கீழே தள்ளியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய சட்டப்படி இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களுக்கு 5 ஆண்டு சிறைத்தன்டனை அனுபவிக்க வேண்டிவரும். குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில் ...

Read More »

மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் டெல்லியில் ‘Raisina Dialogue 2020’ சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு உரையாற்ற இருக்கிறார் ஸ்காட் மோரிசன். இந்த நிகழ்வு அடுத்தம் வருடம் ஜனவரி மாதம் 14 தேதி முதல் ஜனவரி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்த நபர்!

வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாயையும் பிள்ளைகளையும் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரியை அவுஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். டானியல் கிங் என்ற நபரையே காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இரவு 8.45 மணியளவில் குறிப்பிட்ட நபர் மரயோங் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கர்ப்பிணிப்பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர்  சென்மேரிஸ் காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் ...

Read More »