அவுஸ்திரேலியாவில் மர்மமாக கொல்லப்பட்ட இந்திய பெண்!

அவுஸ்திரேலியாவில் தனது மனைவி கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் கூற்று “மிகவும் சாத்தியமற்றது” என அவருடைய கணவர் கூறியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பிரபா அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். அவருடைய திறமையை பார்த்து நிறுவனமும் விசா காலத்தை நீட்டித்து கொடுத்திருந்தது.

மார்ச் 7, 2015 அன்று தன்னுடைய கணவர் குமார் உடன், பிரபா செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவுஸ்திரேலிய காவல் துறை , கடந்த 4 வருடங்களாக தொடர் விசாரணை மேற்கொண்டும் கூட எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான் பிரபாவை கொலை செய்திருக்க வேண்டும் அவுஸ்திரேலிய காவல் துறை சந்தேகிக்கின்றனர். இதற்காக இந்தியா வந்த அவுஸ்திரேலிய காவல் துறை தற்போது வரை 2000 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில், குமார் அவருடைய கல்லூரி காதலியும், குடும்ப நண்பருமான கிரண் ஷகோட்டியுடன் தனியாக வசித்து வந்ததாக சொந்த குடும்ப உறுப்பினர்களே கூறியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள குமார், மனைவி கொலை செய்யப்படுவதற்கு முன் எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

அதற்காக அவரை கொலை செய்வதற்கு இந்தியாவில் இருந்து ஒருவர் ஆள் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்கிற காவல் துறை கூற்று சாத்தியமற்றது. எப்படியோ எனக்கு இறுதியில் நல்ல முடிவு கிடைத்தால் மகிழ்ச்சி தான் எனக்கூறியுள்ளார்.