சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சிகள் மற்றும் விடயங்களை குறித்த கொலை தொடர்பில் முன்னர் விசாரணை செய்த ரி.ஐ.டி.எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் இருவர் மறைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ரி.ஐ.டி.யின் முன்னாள் பிரதானி பிரதி காவல் துறை மா அதிபர் சந்ரா வாகிஸ்ட மற்றும் அப்போது அந்த புலனாய்வுப் பிரிவின் உதவி காவல் துறை அத்தியட்சராக இருந்த பிரசன்ன அல்விஸ் ஆகியோர் இந்த நடவடிக்கையில் தொடர்புபட்டுள்ளதாக தற்போது லசந்த விக்ரமதுங்க விவகாரத்தை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த இரு ரி.ஐ.டி. முன்னாள் பிரதனிகள் தொடர்பிலும் விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும், ஏற்கனவே சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் கைதான கல்கிசை பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இவர்கள் தொடர்பிலும் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.