சிறிலங்கா அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினரே அவுஸ்;திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 25 வயது முகமட் நிஜாம்டீன் சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சரின் நெருங்கிய உறவினர் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. நிஜாம்டீன் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் குற்றமிழைத்திருக்கமாட்டார் அவர் வெளிப்படையான முஸ்லீம் என ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலிய காவல் துறையின் அதிர்ச்சித் தகவல்!
பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான சிறிலங்கா இளைஞன் குறித்து அவுஸ்திரேலிய காவல் துறையினர் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர். குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதனை உறுதி செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், காவல் துறை நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கைதான இளைஞன் ...
Read More »அவுஸ்திரேலிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சரை இலக்கு வைத்த சிறிலங்கா பிரஜை!
அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் பிரஜை மல்கம் டேர்ன்புல் யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முகமட் கமர் நிஜாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சிதரும் விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் மல்கம் டேர்ன்புல் மற்றும் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகரை இந்த நபர் இலக்குவைத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதேவேளை சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்றம் அவரிற்கு பிணை ...
Read More »பனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு! – UPDATED 3
ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை ...
Read More »சிட்னியில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த சிறிலங்கா பிரஜை!
அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் செயற்பட்டதாக குற்றம்சாட்டி சிறிலங்காவை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைதுசெய்யப்பட்டுள்ளவர் சிட்னயின் பல முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்திருந்தார் என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் வருகை தந்து நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த முகமட் கமர் நிஜாம்டீன் என்பவரையே நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறிலங்காவைச் சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என ...
Read More »இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஆஸி.யில் கைது!
இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாகவும் அந் நாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Read More »அவர் பேசிய விதமே, இது தான் அவரின் கடைசி பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது !
அவுஸ்திரேலியாவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலன், இறப்பதற்கு முன்னால் காதலிடம் பேசிய விடயம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மைக்கேல் ஓவென்ஸ் (23) என்பரின் தோழியாக இருந்தவர் ரோசி. மைக்கேலின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மைக்கேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் ரோசியும் உடனிருந்த நிலையில் திடீரென அவரிடம் மனம் விட்டு பேசினார் மைக்கேல். ரோசியை தீவிரமாக காதலிப்பதாகவும், தன்னை திருமணம் ...
Read More »ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை புறநகர் பகுதிகளை நோக்கி அனுப்புவதற்கு ஏதுவான சட்டம்!
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களை regional areas-புறநகர் பகுதிகளில் குடியமர்த்தும்வகையிலான சட்டமுன்வடிவு நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது புதிய அமைச்சரவை முன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்களில் 87 சதவீதமானவர்களுக்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் பிரதேசங்களை அண்டியே தங்களது இருப்பிடங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று தரவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக குடிவரவு அமைச்சு தெரிவித்திருந்தது. எனவே ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களை அண்டிய பகுதிகளில் புதிய குடிவரவாளர்கள் பெருமளவில் குடியேறுவதால் ஏற்பட்டுள்ள சனத்தொகை வளர்ச்சியை ...
Read More »சதுப்பு நில பகுதியில் சிக்கியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான முயற்சியின் போது குயின்ஸ்லாந்தின் முதலைகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் சிக்கிய சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலைகள் நிறைந்த பகுதியில் சிக்கிய படகில் வியட்நாமை சேர்ந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படகின் தலைமை மாலுமி மற்றும் அவரின் சகாவை காவல்துறையினர் அழைத்துச்செல்வதை பார்த்ததாக ஏபிசியின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு எதுவுமின்றி காவல்துறையினரின் வாகனத்திற்குள் சென்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். படகு கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் ...
Read More »முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்கிறார்!
சமீபத்தில் பதவி விலகிய ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று ...
Read More »