பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான சிறிலங்கா இளைஞன் குறித்து அவுஸ்திரேலிய காவல் துறையினர் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதனை உறுதி செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், காவல் துறை நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
கைதான இளைஞன் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள அதேவேளை UNSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார். சிறிலங்கா பிரஜையான 25 வயதான கமர் நிசாம்டீன் என்பவரே கைதாகியிருந்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர் தனித்து செயற்பட்டமை தெரியவந்துள்ளது.