அவுஸ்திரேலியாவில், உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் நிறைந்த மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது பாம்பு பிடிப்பவர்களால் குறித்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உடல் முழுவதும் ஒட்டுண்ணிகள் நிறைந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. சிலந்திப்பேன் வகையைச் சார்ந்த உண்ணிகள் என்று அறியப்படும் சிறு பூச்சிகள் அதன் உடலின் மேல்தோலில் ஒட்டியிருந்தன. பாம்பை மீட்ட பாம்பு பிடிக்கும் நபர் அதனை காட்டுயிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவர்கள் அதன் உடலில் இருந்து 500க்கும் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ரோகித் சர்மாவின் சதம் வீணானது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்!
சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர். சவுதிஅரேபியாவுக்கே அவரை திருப்பி அனுப்ப ...
Read More »அவுஸ்திரேலியாவில் அகதிகள் தடுப்பு முகாமில் போராட்டம்!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் தடுப்பில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாகவும், அத்தோடு அதிகாரிகள் தம்மை கைதிகள் போன்று நடாத்துகின்றனர் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளதாக தெரிவருகிறது. மெல்பேர்னில் இருந்த தடுப்பு முகாம் (MIDC) சமீபத்தில் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெல்பேர்ன் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம் எனப்படும் Melbourne Immigration Transit Accommodation நிலையத்துக்கு அங்கிருந்த அகதிகள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் சுமார் ...
Read More »ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வந்த மர்ம பொதியால் பரபரப்பு!
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உள்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பொதியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு தூதரகம், துணை தூதரகங்களுக்கு இன்று வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது. தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பொதியால் அனுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஏ.சி-யில் ஒளிந்திருந்த பாம்பு !
கொடிய விஷமுள்ள பாம்பு ஏ.சி-யில் ஒளிந்திருந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போனை சேர்ந்த டேனி மேரோக் என்பவர் தனது மனைவி டெனிஸ் உடன் தனது வீட்டுப் படுக்கையறையில் இருந்தார். அப்போது அங்கிருந்த ஏ.சி-யின் பின்புறம் சிறிய வால் ஒன்றினைக் கண்டுள்ளார்கள். அது ஒருவேளை எலியின் வாலாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியுள்ளனர். பின்பு அதன் அருகில் சென்று பார்த்த போது அவுஸ்திரேலியாவில் உள்ள கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றான tiger snake வகை பாம்பு எனத் தெரியவந்துள்ளது இதையடுத்து பதறிபோன தம்பதி பாம்பு பிடிப்பதில் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. ...
Read More »சிட்னி டெஸ்ட்: கடைசி நாள் முழுவதும் நின்று தோல்வியை தவிர்க்குமா ஆஸ்திரேலியா?
சிட்னி டெஸ்டில் கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால் நெருக்கடியில் உள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. ...
Read More »அவுஸ்திரேலியாவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய வானம்!
அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரத்தில் வானம், ஆரஞ்சும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் டாஸ்மேனியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் புகைப் படலம் ஹோபார்ட் நகரத்தைச் சூழ்ந்தது. காட்டுத்தீ ஏற்பட்ட இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் ஹோபார்ட் அமைந்துள்ளது. எனினும் தீயின் புகை பரவி ஹோபார்ட்டையும் பாதித்தது. ஹோபார்ட் நகரவாசிகள், வானத்தைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். காட்டுத்தீ, ஹோபார்ட் நகரத்திற்குப் பரவாது என்றாலும் மூச்சுத்திணறல் நோய்களுடையவர்கள் புகையால் பாதிப்படையலாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். தீயின் காரணமாக யாருக்கும் காயங்கள் ...
Read More »ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றம்!
நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முறையான மருத்துவமின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் குடும்பங்களுடன் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸூக்கு முன்னதாக மூன்று குடும்பங்களையும் அவர்களது குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நவுரு தடுப்பு முகாமில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஏழாக குறைந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் நான்கு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். நவுருத்தீவில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் முறையான மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு ஒன்று ...
Read More »