கொடிய விஷமுள்ள பாம்பு ஏ.சி-யில் ஒளிந்திருந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போனை சேர்ந்த டேனி மேரோக் என்பவர் தனது மனைவி டெனிஸ் உடன் தனது வீட்டுப் படுக்கையறையில் இருந்தார்.
அப்போது அங்கிருந்த ஏ.சி-யின் பின்புறம் சிறிய வால் ஒன்றினைக் கண்டுள்ளார்கள். அது ஒருவேளை எலியின் வாலாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியுள்ளனர்.
பின்பு அதன் அருகில் சென்று பார்த்த போது அவுஸ்திரேலியாவில் உள்ள கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றான tiger snake வகை பாம்பு எனத் தெரியவந்துள்ளது
இதையடுத்து பதறிபோன தம்பதி பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஸ்டீவி என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஸ்டீவி மிகுந்த போராட்டத்துக்கு பின் பாம்பை பிடித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்;
பாம்பானது 29 அடி நீளத்தில் இருந்தது. சுவற்றில் இருந்த ஓட்டை வழியாக உள்ளே வந்துள்ளது.
நல்லவேளையாக ஏ.சி-யின் உள்ளே யாரும் கை வைத்து பார்க்கவில்லை. அப்படி செய்திருந்தால் விபரீத சம்பவம் நடந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal