காட்டுக்குள் சென்று வெளியே மீண்டும் வர வழித்தெரியாமல் பத்து நாட்கள் அங்கேயே உணவின்றி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து தாயும், மகனும் உயிர்வாழ்ந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மிச்சலே ஸ்மால் (40), இவர் மகன் டைலன் டீனே (9) இருவரும் Hunter Valley பகுதியில் அமைந்திருக்கும் மவுண்ட் ராயல் தேசிய பூங்காவுக்கு கடந்த 2-ஆம் திகதி சென்றுள்ளனர். அது மிகப்பெரிய காட்டு பகுதி என்பதால் வெகுதூரம் உள்ளே சென்ற ஸ்மால் மற்றும் டீனேவுக்கு மீண்டும் வெளியில் வருவதற்கான வழி தெரியவில்லை. ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அகதிகள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுவர்: அவுஸ்ரேலியா
அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள தடுப்புமுகாம், ஒக்டோபர் 31ம் திகதியுடன் மூடப்படவுள்ளது. இந்நிலையில் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், விரைவில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டவர்கள் விரும்பினால் நவுறுவுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், தாமாகவே முன்வந்து தமது நாடுகளுக்குச் செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் செல்லவில்லையெனில் வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் Michaelia Cash தெரிவித்தார்.
Read More »அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை!
அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு கூறியுள்ளது.
Read More »அவுஸ்ரேலியாவில் வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம்!
அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முதல்தடவையாக வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தியப் பின்னணி கொண்ட பல ஆண்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்கின்றனர். பின் இங்கே தமது மனைவியை அழைத்து வந்து நிர்கதிக்கு உள்ளாக்கி விடுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தவிடயம் தொடர்பாக ரோயல் கமிஷன் விசாரணையின் அடிப்படையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரிய மாநில பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Robin Scott தெரிவித்தார். இதேவேளை வரதட்சணை விவகாரம் குடும்ப வன்முறையின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டு இதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ...
Read More »உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும்
உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என போர்த்துக்கள் நாட்டின் தூதுவர் ஹெலனா பரோகோ கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் “அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க உயர்கல்வி அடிப்படையானது. அவர்களே நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பக் கூடியவர்கள். நெருக்கடியில் இருக்கும் அகதிகள் இளைய சமுதாயத்திற்காக நாம் முதலீடு செய்யவில்லை என்றால் போரால் அழிவுண்ட நாடுகளை யார் மீண்டும் கட்டியெழுப்புவார்கள். 150 ...
Read More »அவுஸ்ரேலியாவில் அனுப்பப்படாத குறுஞ்செய்தி அதிகாரபூர்வ உயிலாக
இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்பேசி எண்ணையே பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார். ஆனால், அந்தச் செய்தியை அனுப்பாமல் தன் செல்பேசியில் வரைவாகச் சேமித்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்ட பின் அந்த செய்தி அவரது ...
Read More »கணினி ஊடுருவல்: அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு
அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ளன. இந்த ஊடுருவலின்போது, அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும். இந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு சம்பவத்தில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தெரியவில்லை. கணினியில் ஊடுருவிய ...
Read More »அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்
அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார். மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார். மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »அவுஸ்ரேலியா- ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம்!
அவுஸ்ரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி அளிப்பதற்கு வகைசெய்யும் பொது வாக்கெடுப்பில் அந்நாட்டில் உள்ள 62.5 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர். ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட பாதுகாப்பு வழங்கினாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இவ்வகை திருமணத்தை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கான தபால் வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தலில் 62.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை ...
Read More »அவுஸ்ரேலிய இளம் பெண்கள் குறித்த ஆய்வு!
அவுஸ்திரேலிய இளம் பெண்களில், 98 சதவிகிதத்தினர் பாலின சமத்துவமின்மையை உணர்கின்றனர் என ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது. இதேவேளை சுமார் 1700 க்கும் அதிகமான அவுஸ்திரேலியா இளம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அவர்களது வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களில் இளம் ஆண்களுக்கு சமமான முறையில் தாம் நடத்தப்படவில்லையென அவர்கள் உணர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 10 முதல் 17 வயது வரையான பெண்களிடம் இந்த ஆய்வினை Plan International Australia எனும் அமைப்பு நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »