அவுஸ்திரேலிய இளம் பெண்களில், 98 சதவிகிதத்தினர் பாலின சமத்துவமின்மையை உணர்கின்றனர் என ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை சுமார் 1700 க்கும் அதிகமான அவுஸ்திரேலியா இளம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
அவர்களது வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களில் இளம் ஆண்களுக்கு சமமான முறையில் தாம் நடத்தப்படவில்லையென அவர்கள் உணர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
10 முதல் 17 வயது வரையான பெண்களிடம் இந்த ஆய்வினை Plan International Australia எனும் அமைப்பு நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.