அவுஸ்திரேலியமுரசு

மெல்பேர்ணில் இலவச Wi-Fi வசதி!

மெல்பேர்ண் மாநரின் பல பகுதிகளில் இலவச Wi-Fi சேவை நேற்று(29.09.2016) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 11மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் இப்பரீட்சார்த்த திட்டத்தின் கீழ் மெல்பேர்ண் CBDயில் உள்ள அனைத்து தொடரூந்து நிலையங்கள் , Bourke St Mall, Queen Victoria Market, மற்றும் Melbourne Convention and Exhibition Centre இன் South Wharf Promenade ஆகிய இடங்களில் இலவச Wi-Fi வசதி வழங்கப்படுகிறது. இவ்வருட இறுதிக்குள் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் சேவை விஸ்தரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. TPG தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தியாகதீபம் திலீபன் நினைவுப்பாடல்

தியாகி திலீபன் நினைவு பாடல் ஒன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ண் கலை பண்பாட்டுக்குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  

Read More »

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்வு

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக “வன்னியின் கண்ணீர்” அமைப்பினூடாக வழங்கப்படவுள்ளது. விளம்பர அனுசரணையின் மூலமும், நல்லுள்ளங்களின் நன்கொடை மூலமும், உள்ளூர் எழுத்தாளர் திருமதி. ராஜி வல்லிபுரநாதன் ...

Read More »

ஏபி டி அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகல்

360’ டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வி்ல்லியர்ஸ் முழங்கால் காயத்திற்காக அடுத்த வாரம் சத்திர சிகிட்சை  செய்ய உள்ளார். இதனால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியது கிடையாது. கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது. இந்த தொடருக்கு ...

Read More »

நாடு திரும்பும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 20,000 டொலர்

பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 டொலர்களுக்கு மேல் பணப்பரிசு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. மனுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளரையும் பராமரிப்பதற்கு தலா 300,000 டொலர்கள் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு 20,000 டொலர்கள் கொடுப்பது இலாபகரமானது என அரசு கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக தமது தாய் நாடு திரும்புவதற்கு சம்மதிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 10,000 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் தற்போது இத்தொகை 20,000 டொலர்களாக ...

Read More »

ஐ.நா சிறப்பு அதிகாரி அவுஸ்ரேலியா பயணம்

புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நா சிறப்பு அதிகாரி Francois Crepeau எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்ரேலியா வருகை தரவுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் எல்லைப்பாதுகாப்புச் சட்டங்கள் தமது செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும், அகதிகள் தடுப்பு முகாம்கள் தொடர்பில் தம்மால் சுயாதீனமாக விசாரணைகள் நடத்த முடியாத நிலை இருப்பதாலும், தமது விஜயத்தை ரத்துச் செய்வதாக அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் எழுத்து மூல வாக்குறுதியையடுத்து எதிர்வரும் ...

Read More »

கானமழை 2016 நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. Date: Saturday, Oct 01, 2016, 6:00 pm. Venue:Kingston City Hall,Melbourne, Victoria, Australia For more details: 0400 119 633/ 0433 694 046/0434 278 970/ 0410 348 448

Read More »

தியாகி திலீபனின் நினைவு நாள் – 2016

1987 புரட்டாதி 15ம் திகதி ஜந்து அம்சககோரிக்கையினை இந்திய ஆக்கிரமிப்பு படைகளிடம் அவர்கள் கூறும் காந்தியின் வழியிலே நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து தனது உயிரையே தியாகம் செய்த லெப் .கேணல் திலீபனை நினைவு கூறுவோம். நாள்- செப்ரம்பர்-30  -இடம்- மெல்போன் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்.    

Read More »

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா ஒன்று எதிர்வரும் ஜுலை 2017 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கான தற்காலிக பெற்றோர் விசா ஒன்றே இவ்வாறு அறிமுகப்படுத்தப்ப டவுள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தவர்களுடன் கலந்துரையாடும் செயற்பாடு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். தற்போது அமுலில் உள்ள பெற்றோர் விசாக்களைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டிய அதேநேரம் அதிகளவு பணமும் செலவாகின்றது என்பதை துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke ஏற்றுக்கொண்டார். அதேநேரம் வயதான பெற்றோரை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம்

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது. அப்போது விமானத்தின் இன்ஜின் பிரச்சனை காரணமாக விமான ஓட்டுநர் உடனடியாக பிரிஸ்பேனுக்கு விமானத்தை செலுத்தியுள்ளார். பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் பயணிகளின் சீட்டிற்கு அடியில் பயங்கர வெடிசத்தத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர், இச்சம்பவத்தை அவ்விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் வீடியோ ...

Read More »