பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா ஒன்று எதிர்வரும் ஜுலை 2017 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 வருடங்களுக்கான தற்காலிக பெற்றோர் விசா ஒன்றே இவ்வாறு அறிமுகப்படுத்தப்ப டவுள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தவர்களுடன் கலந்துரையாடும் செயற்பாடு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள பெற்றோர் விசாக்களைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டிய அதேநேரம் அதிகளவு பணமும் செலவாகின்றது என்பதை துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke ஏற்றுக்கொண்டார்.

அதேநேரம் வயதான பெற்றோரை பிள்ளைகள் அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவரும்போது அரசுக்கு பாரிய நிதிச்செலவு ஏற்படுவதாகவும், இதனால் பெற்றோர் விசா முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் Productivity ஆணைக்குழு அண்மையில் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்காலிக பெற்றோர் விசா குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள Reports and Publications என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது temporary.parent.visa@border.gov.au என்ற முகவரிக்கு எழுதுங்கள்.