அவுஸ்திரேலிய அரசினால் அகதி அந்தஸ்து வழங்கப்படாது வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் ஏதிலியான வசந்தகுமார் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் உயிரிழந்துள்ளார். வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார். இந்நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் செயற்கை சுவாசம் நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்தது. அவரிற்கான செயற்கை சுவாசத்தை மீள ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
குயின்ஸ்லாந்தில் முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள குடியேற்றவாசிகள்!
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை மீட்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதலைகள் நிரம்பிய டையின்பொரஸ்ட் என்ற சதுப்புநிலக்காட்டிற்குள் அகதிகள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட குழுவினருடன் இணைந்து அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 15 பேரை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் டெயின்டிரீ ஆற்றுபகுதியில் படகொன்று தடுமாறிக்கொண்டிருப்பதை பார்த்த உள்ளுர் மக்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். படகு தரைதட்டியுள்ள பகுதி முதலைகள் நிறைந்தது என்பதால் அதில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்
Read More »ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரி ஜுலி பிஷப் ராஜினாமா!
ஆஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜுலி பிஷப், வெளியுறவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது ...
Read More »அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன்!
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Read More »நான்கு அணிகள் ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’
நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’. இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து ...
Read More »அவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவு!
அவுஸ்ரேலிய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர்கள் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் மல்கம் டர்ன்புல் போட்டியிட தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை அமைச்சரும், முன்னாள் ...
Read More »ஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் – நடனமாடிய ரஷ்ய அதிபர்!
ரஷ்ய அதிபர் புதின், ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆஸ்திரிய பெண் வெளியுறவுத்துறை அமைச்சரான கரின் நெய்சலுக்கு, அந்நாட்டின் தலைநகர் கம்லிட்சில் திருமணம் நடைபெற்றது. நெய்சலின் அழைப்பை ஏற்று, அவரது திருமணத்தில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில் கரினுடன், புதின் ஒன்றாக நடனமாடியது அங்கிருந்தவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழத்தியது. அத்துடன் திருமண விருந்திலும் புதின் கலந்து கொண்டார். ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவிவரும் சமயத்தில் ஆஸ்திரிய பெண் அமைச்சருடன் புதின் ...
Read More »அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் (Mitchell Johnson) அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான மிட்செல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்பே ஓய்வு பெற்றாலும் தனியார் இருபதுக்கு இருபது லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது உபாதையினால் பாதிக்கப்பட்ட இவர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பயிற்சியளிக்கும் அல்லது ஆலோசனைப் பொறுப்புகளில் பங்காற்றுவது பற்றி யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிட்செல் 313 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 153 ஒருநாள் ...
Read More »அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி மூலம் இவர்தான் உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார். மொடலாக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் சமீபத்தில், ring donut – ஐ மிகவும் கவர்ச்சியாக சாப்பிடும் காணொளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி இவரை பின்தொடர்பவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். நான் பிளாஸ்டிக் பாட்டில் ...
Read More »ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற இஸ்ரேல் பிரதமர்!
ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டுக்கு இன்று சென்ற காவல் துறையினர் அவரிடம் 12-வது முறையாக விசாரணை நடத்தினர். யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என காவல் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal