அவுஸ்திரேலிய அரசினால் அகதி அந்தஸ்து வழங்கப்படாது வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் ஏதிலியான வசந்தகுமார் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார். இந்நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் செயற்கை சுவாசம் நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்தது.
அவரிற்கான செயற்கை சுவாசத்தை மீள வழங்க கோரி காணொலி மூலம் அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இக்காணொலி வைரலாகி அனைத்து மக்களிடையேயும் மனவேதனையினை தோற்றுவித்திருந்தது.எனினும் அனைவரது வேண்டுகையினையும் தாண்டி அவரது மரணம் நிகழந்துள்ளது.