அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன்!

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.