Home / செய்திமுரசு / நிகழ்வுமுரசு (page 5)

நிகழ்வுமுரசு

மெல்பேர்ண் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு 2017

பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக உழைத்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக மெல்பேர்ணில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் தமிழ்த்தேசியப் பரப்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்திலும் உன்னதமான பணிகளை முன்னெடுத்து தமிழீழ தேசத்தின் கனவுகளோடு சாவடைந்து தமிழீழ தேசியத் ...

Read More »

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீடு

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு ...

Read More »

தமிழீழ செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் வணக்க நிகழ்வு!- அவுஸ்ரேலியா

அண்மையில் சாவடைந்த தமிழீழச் செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் அவர்களின் வணக்கநிகழ்வு ஜெனிவாவில் முக்கிய உலகத்தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 10 – 03 – 2017 அன்று உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு மொன்பிறில்லியன்ற் என்ற மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் ஈகச்சுடரினை மாவீரர்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராலும் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளர்கள்ட்றெவர் கிறான்ட் தொடர்பான நினைவுரைகளை ஆற்றினார்கள். மன்னார் சிவில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எஸ்.ஜி.சாந்தனின் வணக்கநிகழ்வு

கடந்த 26 02 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஐந்து மாநிலங்களிலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் 2016

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், பிரிஸ்பன், அடேலையிட், மெல்பேர்ண் பெருநகரங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர். சிட்னியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் ஜபார் கலந்து சிறப்புரையாற்றினார். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இம்முறை எழுச்சியுடன் சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நினைவெழுச்சிநாள் – 2016 – ஒஸ்ரேலியா- மெல்பேர்ண் தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுடன் நடந்தேறிய தியாகதீப கலைமாலை நிகழ்வு-2016

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ...

Read More »

மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா 2016” பற்றிய செய்தி

மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது. மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இந்த தமிழர் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 – 01 – 2016 அன்று நடைபெற்றது ஒஸ்ரேலியாவின் விக்டோறியா மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மெல்பேர்ண் நகரில் ஈஸ்ட் பேவுட் றிசேவ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. காலை 9.00 மணிக்குத் ...

Read More »

மெல்பேர்ண் மாவீரர்நாள் – 2015

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சரியாக மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வில்தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திருமதி மனோறஞ்சினி நவரட்ணம் அவர்கள் பொதுச்சுடரை ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2015

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 15 – 09 – 1987முதல் சாகும் வரையிலான உண்ணாநோன்பிருந்து 26 – 09 – 1987 அன்று, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின், 28-வது ஆண்டு நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” 26 – 09 – 2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரின் சென் ஜூட் மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது. திருமதி தமயந்தி ...

Read More »

“ச(ன்)னத்தின் சுவடுகள்” மற்றும் “நாங்களும் மனிதர்களே” வெளியீட்டு நிகழ்வு

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில், உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக, மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில், 200 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக செயற்பாட்டாளர் கௌசிக் மற்றும் காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர். மாலை 4.20 ...

Read More »