குமரன்

கொள்கலன் ஒன்றில் ; கசிவு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது

கட்டாரின் துறைமுகமொன்றி;ல் கப்பல் காணப்பட்டவேளை கொள்கலன் ஒன்றில் கசிவு காணப்படுவது குறித்து தெரியவந்தது என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இயகக்கிய எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்மல் யாட்ஸ்கவிட்ஸ் தெரிவித்துள்ளார். கப்பலில் மாலுமிகளிற்கு நைட்ரிக் அசிட் கசிவது குறித்து தெரிந்திருந்தது என தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்குவதற்கு இந்திய கட்டார் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார் சனல்நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கப்பல் பயணித்த பாதை குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவர் கொள்கலன்கள் பத்தாம் திகதி ...

Read More »

பணம் கொடுத்தால் இதெல்லாம் கிடைக்கும் – ட்விட்டரில் புது சந்தாமுறை

ட்விட்டர் சமூக வலைதளத்தில் துவங்கப்பட இருக்கும் புது சேவை குறித்த விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்த விவரங்கள் ஐஒஎஸ் தளத்துக்கான ஆப் ஸ்டோரிலும் இடம்பெற்றது. தற்போது ட்விட்டர் புளூ விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்திய ட்விட்டர் பீட்டா பதிப்புக்கான கூகுள் பிளே ஸ்டோர் பட்டியலில் ஆப் பர்சேஸ் இடம்பெற்று இருக்கிறது. ...

Read More »

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் – பிரெட் லீ

இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை (வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது) ஏறக்குறைய நியூசிலாந்தில் உள்ளது போன்றே இருக்கும். அதாவது பந்து நன்கு வேகத்துடன் ஸ்விங்கும் ஆகும். இவை எல்லாம் ...

Read More »

50,000 கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா?

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொவிட் தொற்றின் பரவல் காணப்படுவது போலவே வன்னியிலும் தீவிர பரவல் காணப்படுகின்றது. ...

Read More »

அஸ்ட்ராசெனிகா என்ற பெயரில் போலியான தடுப்பூசிகள் வழங்கப்படலாம்..!

ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது,  வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்றுநோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். நாட்டில் ஆறு இலட்சம் பேருக்கு ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி குறித்தும், வியாபாரிகளினூடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் ...

Read More »

சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டி உள்ளது. அங்கு குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 10 பேருக்கு உள்நாட்டில் பரவும் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு முக்கிய நகரங்களில் 14 ...

Read More »

பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்தாரா மணிரத்னம்? – நடிகை சுஹாசினி விளக்கம்

இயக்குனர் மணிரத்னம் தனது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும், தங்களது படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிடுவதற்காகவும் அவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சினிமா பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் மணிரத்னம், ...

Read More »

மெல்பன் நகரின் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

விக்டோரியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெல்பனுக்கான முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக acting premier James Merlino அறிவித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள எவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென தெரிவிக்கப்படுகிறது. Highlights விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுகிறது. மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது. அதேநேரம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இனவாதத்தை அதிகரித்திருக்கும் கொரோனா பெருந்தொற்று

ஈராக்கிலிருந்து வெளியேறிய முகமது அல்-கபாஜி ஆஸ்திரேலியாவில் தங்கள் குடும்பத்தினருடன் அரசியல் தஞ்சம் கோரிய போது அவரது 13 ஆகும். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவிலேயே அவர் கழித்திருக்கிறார். இந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர், அவரைப் பார்த்து, “எந்த நாட்டிலிருந்து வந்தாயோ அந்த நாட்டுக்கே திரும்பிப்போ,” எனக் கத்தியிருக்கிறார். “யாரோ ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள என்னைப் பார்த்து வந்த இடத்திற்கு திரும்பிப்போ என்பது அவமானமாக உள்ளது,” என்கிறார் முகமது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்கனவே ...

Read More »

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய புதிய வைரஸ் பிறழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து கடந்த மாதம் 27 அன்று அமுல்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடு நாளைய தினம் வியாழக்கிழமை இரவு முடிவடையவுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் ஜூன் 10 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More »