அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது.
பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய புதிய வைரஸ் பிறழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து கடந்த மாதம் 27 அன்று அமுல்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடு நாளைய தினம் வியாழக்கிழமை இரவு முடிவடையவுள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் ஜூன் 10 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal