ட்விட்டர் சமூக வலைதளத்தில் துவங்கப்பட இருக்கும் புது சேவை குறித்த விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்த விவரங்கள் ஐஒஎஸ் தளத்துக்கான ஆப் ஸ்டோரிலும் இடம்பெற்றது. தற்போது ட்விட்டர் புளூ விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருக்கிறது.
சமீபத்திய ட்விட்டர் பீட்டா பதிப்புக்கான கூகுள் பிளே ஸ்டோர் பட்டியலில் ஆப் பர்சேஸ் இடம்பெற்று இருக்கிறது. இதில் சேவைக்கான கட்டணம் 2.99 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதே விலை ட்விட்டர் புளூ சேவைக்கு நிர்ணயிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
ட்விட்டர் புளூ சேவையில் பயனர் பதிவிட்ட ட்விட்களை திரும்ப பெறும் வசதி, செயலியை பல நிறங்கள் அடங்கிய தீம்கள் மூலம் கஸ்டமைஸ் செய்வது என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த சேவை துவங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ட்விட்டர் புளூ சேவை பல்வேறு சந்தா முறைகளில் கிடைக்கும். இவற்றில் அதிக விலை கொண்ட சந்தாவில் அதிக அம்சங்கள் வழங்கப்படும். ட்விட்டர் புளூ சேவைக்கான ஆரம்ப விலை மாதம் 2.99 டார்கள், இந்திய மதிப்பில் ரூ. 218 வரை நிர்ணயிக்கப்படலாம்.
Eelamurasu Australia Online News Portal