குமரன்

நாளை ரணில் அவுஸ்ரேலியா பயணம் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(13) அவுஸ்ரேலியா செல்லவுள்ளார். அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பினை ஏற்றே அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 17ம் திகதி வரை பிரதமர் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவந்துள்ளது.

Read More »

இந்திய வம்சாவழி பெண் விண்வெளி பயணம்

இந்திய வம்சாவழியை சேர்ந்த ஷாவ்னா பாண்டியா என்ற பெண், 2018ம் ஆண்டில் விண்வெளி செல்லும் குடிமக்கள் குழுவில் ஒருவராக இணைய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இதுவரையிலும் பிரத்யேக பயிற்சி பெற்று, விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களை மட்டுமே, விண்வெளி வீரர்களாவது வழக்கம். இந்நிலையில், சாதாரண பொதுமக்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை, நாசா மேற்கொள்கிறது. வரும் 2018ம் ஆண்டில் நடைபெற உள்ள இந்த குடிமக்கள் விண்வெளி பயணத் திட்டத்தின் கீழ் பங்கேற்க உள்ள ...

Read More »

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாள்

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ...

Read More »

சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது

சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம்‘சி-3’. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தை இணைய தளத்தில் வெளியாகாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கோர்ட்டும் இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதித்துள்ளது. சூர்யா அவரது ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வேண்டுகோளில், ‘சி-3’படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்கள் அன்பு ஆசீர்வாதத்துக்கு நன்றி. அனைவரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள் ...

Read More »

சியோமி ரெட்மி நோட் 4X

சியோமி நிறுவனம் பிரத்தியேகமாக வெளியிட்ட சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் விலை 189 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரெட்மி நோட் 4X எனும் பிரத்தியேக பதிப்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களை கடந்து ரெட்மி நோட் 4X  முன்பதிவு கிஸ்டாப் தளத்தில் துவங்கியுள்ளது. 189 டாலர்கள் அதாவது இந்திய ...

Read More »

அவுஸ்ரேலியா ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை!

இந்தியா வரும் அவுஸ்ரேலியா நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை என்று கங்குலி கூறியுள்ளார். அவுஸ்ரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 23-ந்திகதி புனேவில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து இந்திய அணியில் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘இந்திய தொடர் அவுஸ்ரேலியாவிற்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் கிரிக்கெட்டில் என்னால் சரியாக கணித்து கூற இயலாது. ஆனால், அவுஸ்ரேலியா ...

Read More »

மூடி மறைக்கப்படும் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. ...

Read More »

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியினை எச்எம்டி நிறுவனம் கோரியுள்ளது. மொபைல் போன் சந்தையில் நோக்கியா பிராண்டு ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியாது. மொபைல் போன் விற்பனையில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கும் நோக்கியா நிறுவனம் சந்தையில் சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் இன்றும் நோக்கியாவிற்கான பெயர் அப்படியே தான் இருக்கிறது எனலாம். விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு ...

Read More »

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நடிகர்-நடிகைகள் ஆதரவு

தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார்? தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டுமா? என்ற கேள்விகள் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கின்றன. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறார்கள். கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக அந்த தரப்பினர் கூறுகிறார்கள். கலை உலகில் ...

Read More »

இந்திய மண்ணில் அசத்தினால் சிறந்த அணி அந்தஸ்தை பெறலாம்: ஸ்டீவன் சுமித்

இந்திய மண்ணில் அசத்தினால் உலகின் சிறந்த அணி அந்தஸ்து கிடைக்கும் என்று அவுஸ்ரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் அவுஸ்ரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. தற்போதைய டெஸ்ட் தொடரும் அந்த அணிக்கு யுத்தம் போன்று தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதையொட்டி அவுஸ்ரேலிய ...

Read More »