இந்திய வம்சாவழியை சேர்ந்த ஷாவ்னா பாண்டியா என்ற பெண், 2018ம் ஆண்டில் விண்வெளி செல்லும் குடிமக்கள் குழுவில் ஒருவராக இணைய உள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இதுவரையிலும் பிரத்யேக பயிற்சி பெற்று, விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களை மட்டுமே, விண்வெளி வீரர்களாவது வழக்கம்.
இந்நிலையில், சாதாரண பொதுமக்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை, நாசா மேற்கொள்கிறது. வரும் 2018ம் ஆண்டில் நடைபெற உள்ள இந்த குடிமக்கள் விண்வெளி பயணத் திட்டத்தின் கீழ் பங்கேற்க உள்ள நபர்கள் யார் யார் என்ற விவரத்தை அண்மையில் நாசா வெளியிட்டது.
அதில், ஷாவ்னா பாண்டியா என்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் இடம்பெற்றுள்ளார். அவர், இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் ஆவார். மேலும், விண்வெளி செல்லும் இந்திய வம்சாவழியினப் பெண்களில் 3வது நபர் என்ற பெருமையையும் ஷாவ்னா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளி சென்ற, இந்தியப் பூர்விக பெண்கள் ஆவர். விண்வெளி பயணம் மேற்கொள்ளும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாகக் கூறியுள்ள ஷாவ்னா, இதற்காக, நாசா மையத்தில் தீவிர பயிற்சியும் பெற்றுவருகிறார்.