குமரன்

Vaccination Passports என்றால் என்ன?

ஆஸ்திரேலிய எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக வெளிநாட்டுப்பயணங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும் Lockdowns – முடக்க நிலை, Border closures – எல்லைகள் மூடப்பட்டிருத்தல், mass event cancellation- திரளானோர் ஒன்று கூடக் கூடிய நிகழ்வுகள் ரத்துச்செய்யப்படுதல், schools closures – பாடசாலைகள் மூடப்பட்டிருத்தல் என்பவற்றுக்கு மீண்டும் எம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழலிலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் செளகர்யங்கள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியைப்பெற Passports – கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவதுபோல, இன்றைய Covid 19 பின்னணியில், ஒரு நாட்டிலிருந்து ...

Read More »

ரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

சிகிச்சை நிறைவடைந்து ரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குற்றப்புலனாய்வுப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை சிகிச்சை நிறைவடைந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுகயீனம் காரணமாக அவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் காலமானார்

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More »

டென்னிஸ்: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கெத்தாக வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார். ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ...

Read More »

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்- தோழி உயிரிழப்பு

நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு ...

Read More »

ஜனாதிபதியின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே வடமாகாணசபையின் பிரதம செயலாளராக தமிழ் தெரியாத ஒருவரின் நியமனம்

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னைய வடமாகாணசபை உறுப்பினர்களின் எதிர்ப்புக் கூட்டம் யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்றத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், வலு ...

Read More »

குயின்ஸ்லாந்து விபத்தில் சிறுமியும் தாயும் மரணம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து சம்பவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர். Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து ...

Read More »

பணியாளர் சேவைக்கு குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்த தொழில் ஆணையாளர் நடவடிக்கை

பணியாளர் சேவைக்கு நிறுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயதை 18 வரை அதிகரிக்க ஆலோசித்து வருவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்தார். பணியாளர் சேவைக்கு நிறுத்தப்படும் அதிகமானவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவருவதை தடுத்துக்கொள்வதற்கு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பணியாளர் சேவைக்கு ஒருவரை நிறுத்தக்கூடிய வயதெல்லையை 18வரை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம், எதிர்காலத்தில் ஒருவரை பணியாளர் சேவைக்கு நிறுத்துவதாக இருந்தால் குறித்த நபருக்கு 18வயது பூரணமாக இருக்கவேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்

Read More »

ரிஷாட்டின் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  குறித்த நால்வரையும் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More »

மாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் போடப்படுகிறது. எனினும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களிடம் பரிசோதனையில் உள்ளது. அந்தவகையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு (12-17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ...

Read More »