ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நால்வரையும் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal