அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் போடப்படுகிறது. எனினும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களிடம் பரிசோதனையில் உள்ளது.
அந்தவகையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு (12-17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம் என அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை வழங்கி இருக்கிறது. இந்த சூழலில் இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal