Home / குமரன் (page 6)

குமரன்

மேதகு பிரபாகரனால் சபையில் சர்ச்சை

நேற்று  நாடாளுமன்றத்தில்   வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார். தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு கட்டத்தில் “மேதகு பிரபாகரன்” என விளித்து கூறிவிட்டார். இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களில் சிலர், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பினர். அப்போது, சபைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ​​​வேலுகுமார் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்தார். முதலாவதாக ஒழுங்குப் பிரச்சினையை ...

Read More »

தமிழக நாடோடிகளின் அவலங்கள்

‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ தங்களை ‘நாடோடிப் பழங்குடியினர்’ (Nomadic Tribes) எனத் தனி இனத்தவராகக் கருதவும், கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வேண்டியும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது. இது சாதி அட்டவணைப்படுத்துதலின் போதாமையையே சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பூர்வகுடிகளான இவர்களை அலைகுடிகள், காலோடிகள் எனவும் அழைக்கலாம். சங்க காலத்தில் பாணர், பொருநர், விறலியர், பாடினியர், கூத்தர், அகவுநர் போன்ற நாடோடிக் குழுக்கள் இருந்தது, சங்க இலக்கியங்கள் வழி ...

Read More »

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்) ஏலம் போனது. பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. அப்போது ஏராளமான நபர்கள் பிரதியை வாங்க ஆர்வம் காட்டினர். ...

Read More »

ஜெய் பீம் விவகாரம் – சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ...

Read More »

தமிழ் இராச்சியத்தின் அரிய கல்வெட்டு

புகைபடர்ந்திருக்கும் இலங்கை தமிழரின் வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டும் வகையில், திருகோணமலையில் மிக அரிய தமிழ்க் கல்வெட்டு, பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு. திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில், கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம், கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது, இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் ...

Read More »

சஹ்ரானை கைது செய்ய 340 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டதாக  முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர் ...

Read More »

ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலியா

ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது. ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது ...

Read More »

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேர் பலியாகலாம்

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், செக்குடியரசு, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல ஜெர்மனியிலும் நோய் தாக்குதல் பல ஆயிரத்தை எட்டியுள்ளது. ...

Read More »

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் படத்தில் உள்ளனர். இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து பாலா இயக்கத்தில் ...

Read More »

மூத்த ஊடகவியலாளர் கானமயில்நாதன் காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது  79ஆகும். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ...

Read More »