நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.
இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
13 வயது சிறுவன், 26 வயது வாலிபர் மற்றும் 60 வயது முதியவர் என 3 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உயிரிழந்ததாக வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Eelamurasu Australia Online News Portal