பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவர மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் வரை தற்போதைய தடை உத்தரவை நீடிப்பதாகவும் அவர் உத்தரவிட்டார்.
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.