குமரன்

வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை தமிழ்க் கட்சிகள் இணைந்து அமைக்க வேண்டும்

“தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சார்பில் வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து தற்போது இடம்பெறும் சர்ச்சை மற்றும், தமிழ்க் கட்சிகளிடையேயான இணக்கப்பாடு – எதிர்கால வேலைத் திட்டம் என்பன தொடர்பில் ‘தினக்குரல்‘ இணையத் தளத்துக்குக் கருத்து ...

Read More »

எங்கே.. எங்கே.. எங்கள் அப்பா எங்கே?

சிறுவர் தினத்திலும் வீதிக்கிறங்கி போராடும் சிறார்கள் இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ;வரவேண்டும்.. வரவேண்டும்.. ...

Read More »

என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது

“கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் என்னைக் குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை. எனக்கு தகவல் துணுக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் கடந்த செப்.29ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “2019 ஏப்ரல் 19 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன இராணுவ புலனாய்வு பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரை உடனடி தாக்குதல் ...

Read More »

ஜே.ஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கியது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன நாட்டின் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காகவே நிறைவேற்று அதிகார முறையை உருவாக்கினார் என அவரது பேரன் பிரதீப்ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துக்குள் சர்வாதிகாரம் என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டிருந்த பல சவால்களை எதிர்கொண்டு அகற்றுவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி முறியடிப்பதற்கு நிறைவேற்று அதிகார முறை உதவியது வெளிநாட்டு இராணுவங்களின் ஊருடுவல்கள்,கிளர்ச்சி மற்றும் நாட்டை அழித்த யுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ள அது ...

Read More »

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் ! மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல்!

யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

Read More »

சாவுல கூட நியாயம் இல்ல – கவீன் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவீன், சாவுல கூட நியாயம் இல்ல என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி நாக்கு அறுக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண் நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த மரணத்தை அடுத்து அவசர அவசரமாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் கூட இல்லாமல் போலீசார் அந்த பெண்ணின் ...

Read More »

ஆஸ்திரேலிய முகாம்களில் அலைப்பேசிகளை தடைச்செய்யும் மசோதா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் அலைப்பேசி பயன்பாட்டை தடைச்செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசால் முன்மொழியப்பட்ட புலம்பெயர்வு திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஆஸ்திரேலிய மேலவையில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், இம்மசோதா முன்மொழியும் அலைப்பேசி தடை கனடா மற்றும் இன்னும் பிற நாடுகளில் மீள்குடியேற முயற்சிக்கும் அகதிகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது அகதிகள் மேலும் கூடுதலான காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் இதனால் ஆஸ்திரேலிய வரிப்பணம் பல மில்லியன்கள் செலவாகக்கூடும் என Ads-Up Refugee Network அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ...

Read More »

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல குழந்தைகள் உணவு கூட ...

Read More »

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி பிரகதி, அசோக் செல்வன் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. இது வதந்தி என்று பிரகதி கூறினார். கல்லூரியில் படித்து கொண்டு இருப்பதாகவும் திருமணம் ...

Read More »

காவியுடைக் காடையர்களும் ஆட்சியின் காவலர்களா?

சில தினங்களுக்குமுன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் இலங்கையின் பௌத்த மக்களுட்பட மனிதாபிமானம் கொண்ட எந்த ஒரு பிரஜைக்கும் மிகக் கவலையையும், ஏன் ஆத்திரத்தையும் கொடுத்திருக்கலாம். மட்டக்களப்பு நகரின் மங்களறாமய விகாரையைச் சேர்ந்த அம்பிற்றிய சுமணரத்தன தேரர் என்ற ஒரு காவியுடை தரித்த நபர் தன்னை ஒரு பௌத்த துறவியெனப் பறைசாற்றிக் கொண்டு அரசாங்க தொல்லியற் திணக்கள அதிகாரிகள் மூவரை (இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்), அகழ்வாய்வுக்கென குறிவைக்கப்பட்ட ஒரு நிலத்தை அவர்கள் கனரக யந்திரத்தைக்கொண்டு தரைமட்டமாக்கினரென்று குற்றஞ்சாட்டி, அவர்களை அடித்துக் காயப்படுத்தி, ...

Read More »