குமரன்

மிகச்சரியான மாற்றம்

தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை ...

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டவை

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டிருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களிற்கே தடுப்பு மருந்தினை வழங்கவுள்ளதாக பொதுமக்கள் சுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சுசி பெரேரா தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களிற்கு நோய் அறிகுறிகள் குறைவாக காணப்படு;ம் இதன் காரணமாக உயிரிழப்புகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார். 20வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப்பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள சுசி பெரேரா இந்த பிரிவில் அடங்குபவர்களிற்கு கொரோனா ...

Read More »

ஹரி – அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு ப்ரியா பவானி சங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யாவுடனான படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹரி. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்களைவிட, இந்தப் படத்தின் பொருட்செலவு அதிகம் என்கிறது படக்குழு. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் ...

Read More »

அரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு

கடந்த 2020-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களுள் ஆகாஷ் சிங் ரத்தோர் எழுதிய ‘அம்பேத்கர்’ஸ் ப்ரியாம்பில்’ பரவலான கவனத்தைப் பெற்றது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு ரகசிய வரலாறு’ என்று தனது புத்தகத்துக்குத் துணைத்தலைப்பு இட்டிருந்தார் ஆகாஷ். அரசமைப்பின் திறவுகோல் என்று வர்ணிக்கப்படுவது அதன் முகப்புரை. ஜவாஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட குறிக்கோள் தீர்மானமே அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைந்தது என்று கூறப்படுகிறது. முகப்புரை உருவாக்கத்தில் அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ், அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் குறித்து கேள்விகளை ...

Read More »

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் கால் தடத்தை பாதுகாக்க சட்டம்!

விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்க அரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11( Apollo 11) விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார். இச் சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

Read More »

யாழ்.மாநகர சபை வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம்ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி இழந்தார். அதன் பின் நடைபெற்ற மேயர் தெ ரி வி ல் ...

Read More »

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவுகாவல் துறை நிலையத்தில் 27.01.2020 இன்று முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் ரவிகரன் அவர்கள் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டில் ரவிகரன் அவர்களுடன் ரைதுறைப்பற்று பிரதேசசபை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தற்காலிக இணைப்பு விசா!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சுமார் 50 பேரை ஓராண்டு தடுப்புக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு விடுவித்திருக்கிறது. இவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளாவர். ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இந்த அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் குடிவரவுத் தடுப்பிலும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக இணைப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 8 ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து ...

Read More »

நினைவேந்தல் அங்கிகாரங்கள்!

நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. ...

Read More »

டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியனாக இருப்பார்

டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகிய நிலையில், முன்னாள் அதிபர் அலுவலகத்தை புளோரிடாவில் திறந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்பதற்கு முன் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, புளோரிடாவில் உள்ள பாம் பீச்சில் உள்ள அவருடைய கோல்ஃப் கிளப்பிற்கு சென்றார். அமெரிக்காவின் 45-வது அதிபரான டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபருக்கான அலுவலகத்தை அங்கு திறந்தார். இந்த நிலையில் அலுவலகம் சார்பில் டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியன் எனத் தெரிவித்துள்ளது. டொனால்டு டிரம்பின் டுவிட்டர் ...

Read More »