குமரன்

சிட்னியில் உல்லாச படகில் பயணம் செய்த சிலருக்கு Omicron தொற்று?

வெள்ளிக்கிழமை இரவு சிட்னி Harbour boat cruise-இல் இருந்தவர்களில் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அதிலிருந்த சுமார் 140 பேரைத் தொடர்பு கொள்ள சுகாதார அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் இருவருக்கு Omicron தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Omicron திரிபானது ஏற்கனவே பரவியுள்ள  கோவிட்-19 திரிபுகளைக் காட்டிலும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்றபோதிலும் இன்னும் எச்சரிக்கை தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. நாட்டிலுள்ள 5-11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலான  இறுதி ...

Read More »

எங்களை சுடத் துவங்கினார்கள்…

நாகலாந்தில் ராணுவ வீரர்களின் தாக்குதலில் உயிர் பிழைத்த நபர்களை நேரில் சந்தித்து பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் நாகலாந்தில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் தங்கள் அனுபவத்தினை இந்தியன் எக்ஸ்பிரசிற்கு பகிர்ந்துகொண்டுள்ளனர்.  நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் அது… அவர்கள் எங்களை அங்கேயே தாக்கினார்கள் என்று 23 வயது ஷெய்வாங்க் கூறினார். நாகலாந்து மாநிலம் ஓட்டிங் கிராமத்தில் சனிக்கிழமை சுரங்கத் தொழிலாளிகள் 8 பேர் மீது ராணுவத்தினர் நடத்திய ...

Read More »

ராணுவ உலங்கு வான ஊர்தி விபத்து- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி

உலங்கு வான ஊர்தி விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார். குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ உலங்கு வான ஊர்தி விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ உலங்கு வான ஊர்தி மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read More »

மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்

1799-ம் ஆண்டு மாவீரர் நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார். 1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ...

Read More »

மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் உள்ள இடங்கள் கூட காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுவதுடன் 6 அடிக்கு மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் இருக்குமென்றால் அந்த இடம் காடாக ஒதுக்கப்பட்ட இடமாகவும் அதேபோல் கூகுள் வரைபடத்தில் பார்த்து கொஞ்சம் பச்சை வட்டமாக இருந்தால் அதுவும் ஒரு காட்டுப் பிரதேசமாகவும் ஒதுக்கப்படும் அவலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

Omicron தொற்றுக்குள்ளான ஒருவர் கான்பராவிலுள்ள பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தநிலையில் குறித்த பள்ளியுடன் தொடர்புடையதாக சுமார் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அத்தியாவசியமற்ற வணிக இடங்களுக்குச் செல்ல டிசம்பர் 17 முதல் தடை விதிக்கப்படும். Gold Coast-இல் கோவிட் தொற்றுக்கண்ட ஒருவர் அங்குள்ள முதியோர் பராமரிப்பு இல்லமொன்றுடன் தொடர்புடையவர் என குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இதுவரை வேறு எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ...

Read More »

குசினிக் குண்டு

காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல.  இந்தியாவில் சீதனம் கேட்டு பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டார் என்று கூறி பெண்ணின் கணவரும் அவருடைய உறவினர்களும் தப்ப முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் பல செய்திகளை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.ஒரு கொலையை சமையலறை விபத்தாக உருமறைப்பு செய்வது என்பது குடும்ப வன்முறைகளில் மிகக் குரூரமான ஒன்று. சீதனப்படுகொலை என்று வர்ணிக்கத்தக்க காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நமது நாட்டில் அனேகமாக இல்லை. எனினும் தமிழ் வாசகர்கள் படித்த சிலிண்டர் வெடிப்பு ...

Read More »

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன், ஐசியூவில் படுத்தபடி கதை எழுதியதாக படவிழாவில் பேசி இருக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் என்னை ஐசியூ அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அப்போது நாம் மீண்டு வந்து விடுவோம் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நிலையிலும் நான் எழுதிக்கொண்டே இருந்தேன். ஒரு கையில் ...

Read More »

சிரியா துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் நடைபெற்று வரும் மிக முக்கிய துறைமுகத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவில் உள்ள ...

Read More »

மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் புதிதாக 23,803ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரிக்க முயற்சி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 32,110ஏக்கர் காணிகளை வனவளத்திணைக்களம் அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வனவளத்திணைக்கள அதிகாரி எஸ்.ஜி.சுனில் ரஞ்சித், காடுபேணல் சட்டத்தின்கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும், மாந்தை கிழக்கு பிரதேசங்களில் தம்மால் புதிதாக ஒதுக்கக் காடுகளாக 23,803ஏக்கர் காணிகள் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும், எனவே அவ்வாறு ஒதுக்கக் காடுகளாக அடையாளம் கணப்பட்டுள்ள குறித்த காணிகளை தமக்கு விடுவித்துத் தரவேண்டுமென, முல்லைத்தீவு மாவட்டசெயலர் கதிர்காமுத்தம்பி விமலநாதனை எழுத்துமூலம் கோரியுள்ளதாகவும் தெரியவருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே வனவளத் திணைக்களத்தின் தொடர்ச்சியான இந்த ...

Read More »