- Omicron தொற்றுக்குள்ளான ஒருவர் கான்பராவிலுள்ள பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தநிலையில் குறித்த பள்ளியுடன் தொடர்புடையதாக சுமார் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
- குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அத்தியாவசியமற்ற வணிக இடங்களுக்குச் செல்ல டிசம்பர் 17 முதல் தடை விதிக்கப்படும்.
- Gold Coast-இல் கோவிட் தொற்றுக்கண்ட ஒருவர் அங்குள்ள முதியோர் பராமரிப்பு இல்லமொன்றுடன் தொடர்புடையவர் என குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இதுவரை வேறு எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
- முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பண்டிகைக் காலத்தில் மூன்றில் ஒருவர் குறைந்தளவு உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தால், அதனால் பாதிக்கப்படக்கூடிய தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப்பற்றி கவலைப்படுவதாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 61 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,185 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 260 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர்
ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.