பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன், ஐசியூவில் படுத்தபடி கதை எழுதியதாக படவிழாவில் பேசி இருக்கிறார்.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் என்னை ஐசியூ அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அப்போது நாம் மீண்டு வந்து விடுவோம் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நிலையிலும் நான் எழுதிக்கொண்டே இருந்தேன். ஒரு கையில் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். இந்தக் கலைதான் என்னை மீண்டும் விடுதலை செய்து கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

சென்னையில் ஓ.எம்.ஆர். பகுதியைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதையைப் படித்தபோதுதான் ஜெயில் படத்தை எடுக்க ஐடியா வந்தது. இது சென்னையில் நடக்கும் பிரச்சனை மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் பிரச்சனை என்று வசந்த பாலன் பேசினார்.
Eelamurasu Australia Online News Portal