குமரன்

14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்பினர்

4-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணிகளை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேறுவழியின்றி கடந்த மாதம் 4-ந் தேதி போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விரைவாக அனுப்பி வைத்தது. இந்தியாவில் ...

Read More »

தாதிமார் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டம்

அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன்படி இன்று சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. மெதிவத்த ஊடகங்களிடம் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளனர் எனவும், இதனாலேயே தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் மெதிவத்த குறிப்பிட்டார். இந்தத் தீர்மானத்துக்கமைய இன்று காலை முதல் நாளை காலை வரையில் பணிகளில் இருந்து தமது சங்கத்தின் ...

Read More »

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரியாக நிக் ஹாக்லி நியமனம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்த நிக் ஹாக்லி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நிக் ஹாக்லியை நியமித்ததை அவுஸ்திரேலிய கிரிக்கெட் திங்களன்று (மே 31) உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டு கடந்த பருவத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதை மேற்பார்வையிடும் ஹாக்லி, 2020 ஜூன் முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். கிரிக்கெட்டுக்கு முன்னர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வணிக பேச்சுவார்த்தைகளின் தலைவராக ஹாக்லி இருந்தார். ...

Read More »

மோகன் ராஜா பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரஞ்சீவி

லூசிபர் தெலுங்கு ரீமேக்கிற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான ...

Read More »

யாழ் பொது நூலக எரிப்பு தமிழர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாச்சார தாக்குதல் , 40 ஆண்டுகள் நிறைவு

( 31/5/1981 இரவு எரிக்கப்பட்டு – 1/6/1981 மாலை ௭ரிந்து முடிந்தது . ) தென்னாசியாவில் இந்திய துணைக்கண்டத்துக்கு அருகேயுள்ள சுமார் 2500 வருடகால பழமையுள்ள தீவுத்தேசம் இலங்கை. கடந்த கால் நூற்றாண்டகளுக்கு மேலாக உள் நாட்டு போர் நடந்த பூமி இது. வடக்கே இருக்கும் தமிழரின் நகரான யாழ்பாணத்தின் ஒரு நெடிய போரின் மௌன சாட்சியான நூலகத்தின் கதை இது. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் ...

Read More »

புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்!

ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலிய வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கர், ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருக்கும் நியூசிலாந்து அரசு

ஆஸ்திரேலி தடுப்பு முகாம் அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழான மீள்குடியேற்றம் நிறைவடைந்த பின்னர், நியூசிலாந்தின் சலுகையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. அதே சமயம், ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இடையேயான சந்திப்பில் இதுகுறித்த விவாதிக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம்,ஆஸ்திரேலியாவின் ...

Read More »

மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்

இந்தியாவில் இருந்து திடீரென டொமினிகாவுக்கு வந்த விமானம், மெகுல் சோக்சியை டொமினிகாவில் இருந்து அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என்று தகவல் பரவியது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) ...

Read More »

தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே?

‘புதிய வழமை’ என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்னும் சில நாடுகள், ...

Read More »

கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் குறித்து அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு

கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றைத் தயாரித்து அதனைப் பகிரங்கப்படுத்துவதுடன் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதுகுறித்து தமக்கு அறியத்தர வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது. கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை அளித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பல்வேறு நெருக்கடிகள் ...

Read More »