குமரன்

சிட்னியின் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை!

சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கான நுழைவாயிலிற்கு அருகில் காணப்படும் பூக்கடைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த டனுகுல் மொக்மூல் என்ற நபரே இவ்வாறு காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளார். ஆயுதமுனையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெறுகின்றது என்ற தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பின்னர் குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கையில் கத்திரிகோலை ...

Read More »

கிளிநொச்சி விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது!

கிளிநொச்சி-செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. இதன்படி கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் (வயது-59) என்பவருக்கே தேசிய ரீதியில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. விருதுடன், சான்றிதழ் பெற்ற இவருக்கு நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் விருது வழங்கப்பட்டது.

Read More »

மீண்டும் வந்த கூகுள் ‘கிளாஸ்!’

கண்ணாடி போல அணிந்துகொள்ளும் சக்திவாய்ந்த, ‘கிளாஸ்’ கணினியை நுகர்வோருக்கான கருவியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது கூகுள். ஆனால், அது படு தோல்வியடைந்தது. ஆனால், கிளாசை இந்த முறை தொழில் துறையினருக்கான அணி கணினியாக மறு அறிமுகம் செய்திருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த முறை, எட்டு மெகா பிக்செல் கமராவுடன் வந்துள்ள, ‘கிளாஸ்’ வலுவான, ‘வை பை’ திறனையும், அதிக தகவல் அலசும் திறனையும் கொண்டுள்ளது. நேரலை காணொலியை பயன்படுத்தா விட்டால், இதன் மின்கலன், 8 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. ...

Read More »

சினிமாவாகிறது ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் வாழ்க்கை!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர பரப்பண அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறைக்குள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளிவந்தன. ரூபாவின் துணிச்சலையும், நேர்மையையும் பாராட்ட வேண்டிய அரசு அவரை பணியிடமாற்றம் செய்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு மிரட்டல் வந்தது. கர்நாடக டிஜிபி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார். ஒரு ...

Read More »

எனது கணவர் முன்னாள் போராளி அல்ல!-மனைவி டெனீசியா

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் நேற்று (25 ) காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபரின் மனைவி டெனீசியா தனது கணவர் முன்னாள் ...

Read More »

அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ்

அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் திகழ்கிறது என CommSec இன் State of the States (மாநிலங்களின் மாநிலம்) அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம் வர்த்தக முதலீடு, கட்டுமானப்பணிகள், வேலையற்றோர் வீதம், சனத்தொகை வளர்ச்சி உள்ளிட்ட 8 அம்சங்களின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் முதலிடத்திலும் விக்டோரியா இரண்டாமிடத்திலும் ACT மூன்றாமிடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா 8ம் இடத்தில் உள்ளது என இந்த ...

Read More »

போதை பொருள் விவகாரம்: சார்மியை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க உத்தரவு!

போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மியை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தெலுங்குபட உலகின் நடிகர்-நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு தெலுங்கானா மாநிலம் கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை சார்மிக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ...

Read More »

மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்!

லெனோவோ நிறுவனம் அதிகம் எதிரபார்க்கப்பட்ட மோட்டோ Z2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. முந்தைய ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சாதனத்திலும் ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்: * 5.5 இன்ச் QHD 1440×2560 பிக்சல் டிஸ்ப்ளே * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் * 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி * 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி * டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் * 5 எம்பி ...

Read More »

லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட,சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மீண்டும்  8 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று (25)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More »

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் பதவி நீக்கம்

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சட்டப்படி அந்நாட்டு அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமையோ, அதற்கு மேற்பட்ட குடியுரிமையோ பெற்றிருந்தால் நாடாளுமன்றத்துக்கு தேர்வாக முடியாது. இந்நிலையில் அந்நாட்டு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மேத்யூ கேனவன் இத்தாலி குடியுரிமை பெற்றிருப்பது தெரிய வந்ததையடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு தனது தாய் இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாகத் தெரிவித்துள்ள கேனவன், ஆனால் தனது தாய் தனக்கும் சேர்த்து இத்தாலியக் குடியுரிமை பெற்றது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ...

Read More »