இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய சட்டப்படி அந்நாட்டு அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமையோ, அதற்கு மேற்பட்ட குடியுரிமையோ பெற்றிருந்தால் நாடாளுமன்றத்துக்கு தேர்வாக முடியாது.
இந்நிலையில் அந்நாட்டு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மேத்யூ கேனவன் இத்தாலி குடியுரிமை பெற்றிருப்பது தெரிய வந்ததையடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு தனது தாய் இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாகத் தெரிவித்துள்ள கேனவன், ஆனால் தனது தாய் தனக்கும் சேர்த்து இத்தாலியக் குடியுரிமை பெற்றது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
எனினும் சட்டபூர்வ ஆலோசனைகளைப் பெறாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.