அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் திகழ்கிறது என CommSec இன் State of the States (மாநிலங்களின் மாநிலம்) அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம் வர்த்தக முதலீடு, கட்டுமானப்பணிகள், வேலையற்றோர் வீதம், சனத்தொகை வளர்ச்சி உள்ளிட்ட 8 அம்சங்களின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் முதலிடத்திலும் விக்டோரியா இரண்டாமிடத்திலும் ACT மூன்றாமிடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா 8ம் இடத்தில் உள்ளது என இந்த அறிக்கையில் சுட்டுகின்றது.
Eelamurasu Australia Online News Portal