குமரன்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி

அட்லி ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லி தயாரிப்பில் முதன்முதலாக உருவாகியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிடவுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஐக் என்பவர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சங்கிலி புங்கிலி கதவத்தொற ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அட்லி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவிருக்கும் மேலும் ...

Read More »

அரசு மருத்துவமனையில் இலவசமாக சில பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம்

அழகான சிரிப்பு என்பது வாய் சுகாதாரம் அல்ல.  சுகாதாரமற்ற வாயினால் மற்றைய உடல் பாகங்களின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். அவுஸ்ரேலியாவில் பல் வைத்தியத்திற்கு கட்டணம் அதிகம்.  ஆனால் அவைகளை பல வகையில் குறைக்கலாம். அரசு மருத்துவமனையில் இலவசமாக சில  பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம் ஆனால்  பற்களை சுத்தம் செய்வது, பற்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தல் போன்ற சிலவைகளை Medicare பாவித்து செய்துக்கொள்ள முடியாது.  ஆகவே பலர் தங்களின் தனியார் சுகாதார காப்பீடு கொண்டு தனியார் பல் வைத்தியரிடம் சிகிச்சை பெறுகின்றனர். அரசின் ‘ Child Dental ...

Read More »

வீடுகள் கட்டுவதற்கு அரச நிலங்களை வழங்கும் திட்டம்!

சிட்னி மற்றும் மெல்போர்னில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களை பொதுமக்களுக்கு வழங்கும் இரகசியத் திட்டமொன்றை அரசு வைத்துள்ளது.

Read More »

ஹவாய் ஹானர் பீ 2 ஸ்மார்ட்போன்

டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹவாய் ஹானர் பீ 2 ஸ்மார்ட்போனில் எமோசன் UI 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. ஹவாய் ஹானர் பீ 2 ஸ்மார்ட்போனில் 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.50 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் பீ 2 ...

Read More »

திருமணம் நெருங்க நெருங்க சமந்தாவுக்கு புது படங்கள்!

சிவகார்த்திகேயன் இப்போது நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த ஜனவரியிலேயே தொடங்கியிருக்க வேண்டியது. வேலைக்காரன் படம் தாமதமானதால் இந்த படமும் தாமதமாகி விட்டது. இப்போது மே மாதம் தொடங்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். மே மாதம் என்றால் சமந்தா கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம், விஷாலின் இரும்புத்திரை படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் இரும்புத்திரை படத்துக்கும் மே மாதத்தில்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இவை தவிர இரண்டு ...

Read More »

தெற்கு அவுஸ்ரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

தெற்கு அவுஸ்ரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி high points state nomination-இன் கீழ் தெரிவுசெய்யப்படுவதற்கான புள்ளிகள் 80 இலிருந்து 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு வருகிறது. இதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களைத் தாக்கல் செய்பவர்களை இப்புதிய நடைமுறை பாதிக்காது. இதேவேளை தெற்கு அவுஸ்ரேலியாவுக்கான high points மற்றும் chain migration stream-இன் கீழ் கீழ்க்காணும் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. . Accountant (General) Human resources ...

Read More »

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்- அவுஸ்ரேலிய அருங்காட்சியம்

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலை கள் அமெரிக்க கலைக்கூடத்தில் இருப்பது குறித்து நேற்றைய ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடத்திவரப்பட்ட சோழர் காலத்து கிரானைட் நந்தி சிலை, ஐம்பொன் பத்ரகாளி சிலை, விஜயநகர பேரரசு காலத்து துவாரபாலகர் சிலைகள் ஆகியவை தங்கள் வசம் இருப்பதாக அவுஸ்ரேலிய அருங்காட்சியகமான ’நேஷனல் கேலரி ஆஃப் அவுஸ்ரேலியா’ (என்.ஜி.ஏ.) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் அவுஸ்ரேலிய அரசுக்கு சொந்த மான அருங்காட்சியகமான என்.ஜி.ஏ-யில் பல நாடுகளைச் சேர்ந்த சிலைகள் உள்ளிட்ட கலைப் ...

Read More »

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு மேலும் பதவியுயர்வு!

போர்க்குற்றச்சாட்டுக்களினை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார்.இவரது வதிவிடத்தினில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையினில் மரணித்தமை தொடர்பினில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையினில் ஒய்வு முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் 58 ...

Read More »

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா

வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது. வடகொரியாவின் இந்த அறிவிப்பால் தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜப்பானுக்கு அரசு பணிநிமித்தமாக பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் டோக்கியோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதில் ...

Read More »

அவுஸ்ரேலியாவை அழிப்போம்!

அணு ஆயுதம் மூலம் அவுஸ்ரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை அவுஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது. இதை அவுஸ்ரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் ...

Read More »