அணு ஆயுதம் மூலம் அவுஸ்ரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை அவுஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது.
இதை அவுஸ்ரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் தொடர்ந்தால் அவுஸ்ரேலியா மீது அணுகுண்டு வீசுவோம் என கூறப்பட்டுள்ளது.
இது நடந்தால் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலை மையம் Opera House தகர்க்ப்படும்.
இந்த தாக்குதல் மூலம் மூன்றாம் உலக போரை ஆரம்பிப்பது வட கொரியாவின் திட்டம் என நம்பப்படுகிறது.
இதனிடையில், வட கொரியாவின் அணுகுண்டு அனுகுமுறை நம் பிராந்தியத்திற்கு ஏற்கத்தக்கது அல்ல என அவுஸ்ரேலியா வெளியுறவு துறை அமைச்சர் Julie Bishop இரு தினங்களுக்கு முன்னர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.