உயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது பெருந்துயர் என்று மாணவி அனிதா தற்கொலை குறித்து நடிகர் பார்த்திபன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு பலரும் கண்டனக் குரல்களை பதிவு செய்து வரும் வேளையில் இயக்குநரும், நடிகருமான இரா.பார்த்திபனும் இரங்கலுடன் கண்டனக் குரலும் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் … அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி ...
Read More »குமரன்
288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன்
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 288 நாட்கள் தங்கி இருந்த பெக்கி விட்சன் தனது பயணத்தை முடித்து விட்டு இன்று பூமியை வந்தடைகிறார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இவர் அங்கு 288 நாட்கள் தங்கி பணியாற்றியுள்ளார். பெக்கி தனது பயணத்தை ...
Read More »சீன அகதிகளை மீண்டும் சொந்த நாட்டிற்கே நாடு கடத்திய அவுஸ்ரேலியா!
படகு வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்த ஆறு சீனர்கள், மீண்டும் சீனாவுக்கே அவுஸ்ரேலிய அரசு நாடுகடத்தியது. அவுஸ்ரேலியாவின் மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்புக்கு இடையே ஆறு சீனர்களை கொண்ட படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் சாய்பாய் தீவைச் சென்றடைந்தது. இவர்கள் அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐந்து சீனர்கள் மீண்டும் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக பப்பு நியூ கினியாவை சேர்ந்த ஒருவரும், சீனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். குவின்ஸ்லாண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 2013 ஆம் ...
Read More »நான் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லை!- மகிந்த ராஜபக்ஷ
புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் நாள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இரா.சம்பந்தனுக்குமிடையில் அரசியலமைப்புத் தொடர்பாக முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்புத் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தனக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதெனவும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும், தமிழர்கள் இணைந்து வரக்கூடிய இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என தான் மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். இச்சந்திப்புத் தொடர்பாக ...
Read More »அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் இதைப் படிங்க!
அவுஸ்திரேலியாவில் EFTPOS, MasterCard, Visa, American Express card என வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தும் போது மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் Surcharges எனப்படும் மேலதிக கட்டணத்தை அளவுக்கதிகமாக அறவிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 1 முதல் ஆண்டொன்றுக்கு 25மில்லியன் வருமான மீட்டும் பெரிய நிறுவனங்கள் தம்முடைய விருப்பத்திற்கு Surcharges அறவிட முடியாதென கூறப்பட்டிருந்தது. Australian Competition and Consumer Commission (ACCC) ஆல் நியமிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டே இதனை அறவிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2017 ...
Read More »லெனோவோ கன்வெர்டிபிள் லேப்டாப்கள் அறிமுகம்
லெனோவோ நிறுவனத்தின் யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்களின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். லெனோவோ நிறுவனம் புதிய யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் மற்றும் Miix 520 விண்டோஸ் 2 இன் 1 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. யோகா 920 லேப்டாப்பில் கார்டனா வசதி கொண்டுள்ளது. இதனால் நான்கு மீட்டர் தொலைவில் இருந்தும் வாய்ஸ் கமாண்டுகளை புரிந்து கொள்ள முடியும். இந்த லேப்டாப்பில் நியர் எட்ஜ்-லெஸ் டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி ...
Read More »இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கடிதம் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்
ஜெர்மனியை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது. ஜெர்மனியை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது நெருங்கிய நண்பர் மைக்கேல் பெஸ் கோவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடவுள் மற்றும் பல பொருட்கள் குறித்து விவாதித்து இருந்தார். அக்கடிதம் கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் திகதி எழுதப்பட்டது. அது சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.
Read More »வித்தியாசமாக வண்டி ஓட்டி வரும் விதார்த்
வித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தை அடுத்து ‘வண்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘மைனா’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் விதார்த். பிரபு சாலமன் இயக்கி இருந்த இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இப்படத்தில் விதார்த்தின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இப்படத்திற்காக பல விருதுகளும் பெற்றார். இப்படத்திற்கு பல படங்களில் நடித்தாலும், ‘ஆள்’, ‘காடு’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் ...
Read More »கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாதாம்!
“தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும் குறிப்பிட்டார். “சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் பறவாயில்லை, எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று (30), ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு ...
Read More »சீனா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்தை சுற்றிப்பார்க்க விமான சுற்றுலா!
இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் சீனா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளை சுற்றிப்பார்க்க விமானச் சுற்றுலாவை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: ஐஆர்சிடிசி சார்பில் பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. ரயில் மூலம் மட்டுமல்லாமல், விமானம் மூலமாகவும் சென்னையில் இருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சீனா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்துக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். சீனா – ஜியான் (8 நாட்கள்) செப்டம்பர் 29-ம் ...
Read More »