இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் சீனா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளை சுற்றிப்பார்க்க விமானச் சுற்றுலாவை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: ஐஆர்சிடிசி சார்பில் பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. ரயில் மூலம் மட்டுமல்லாமல், விமானம் மூலமாகவும் சென்னையில் இருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
சீனா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்துக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். சீனா – ஜியான் (8 நாட்கள்) செப்டம்பர் 29-ம் தேதி புறப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.94,000. அவுஸ்ரேலியா– நியுசிலாந்து சுற்றுலாப் பயணம் (17 நாட்கள்) நவம்பர் 9-ம் திகதி புறப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரமாகும்.
மேற்கண்ட கட்டணத் தொகையில் விமானக் கட்டணம், விசா, ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம், இந்திய உணவுகள், நுழைவுக் கட்டணம் ஆகியவை அடங்கும். இதுதொடர்பாக மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள (சென்னை) 9003140673, 9840902918/919, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Eelamurasu Australia Online News Portal