லெனோவோ கன்வெர்டிபிள் லேப்டாப்கள் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்களின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

லெனோவோ நிறுவனம் புதிய யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் மற்றும் Miix 520 விண்டோஸ் 2 இன் 1 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. யோகா 920 லேப்டாப்பில் கார்டனா வசதி கொண்டுள்ளது. இதனால் நான்கு மீட்டர் தொலைவில் இருந்தும் வாய்ஸ் கமாண்டுகளை புரிந்து கொள்ள முடியும்.
இந்த லேப்டாப்பில் நியர் எட்ஜ்-லெஸ் டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, 360 கோணத்தில் வாட்ச்பேண்ட், விண்டோஸ் ஹல்லோ கொண்டு கைரேகை மூலம் லாக்-இன் செய்யும் வசதி, கான்ஸ்டண்ட் கனெக்ட் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப், ஸ்டான்டு, டென்ட் மற்றும் டேப்லெட் என நான்கு மோட்களில் யோகா 920 லேப்டாப் பயன்படுத்த முடியும்.
லெனோவோ யோகா 920 முக்கிய அம்சங்கள்:
– 13.9 இன்ச் UHD 3840×2160 IPS டச் ஸ்கிரீன் அல்லது FHD 1920×1080 IPS டச் ஸ்கிரீன்
– 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i7 பிராசஸர்
-இன்டெல் இன்டிகிரேட்டெட் கிராஃபிக்ஸ்
– விண்டோஸ் 10 ஹோம்
– 8 ஜிபி ரேம் அல்லது 16 ஜிபி ரேம்
– 256 ஜிபி PCIe SSD / 512 ஜிபி PCIe SSD / 1000 ஜிபி PCIe SSD
– 720 பிக்சல் எச்டி CMOS கேமரா
– டால்பி அட்மோஸ் கொண்ட ஜெ.பி.எல். ஸ்பீக்கர்கள் JBL speakers with Dolby Atmos (with headphones)
– 2 x யு.எஸ்.பி. டைப்-சி
– 1 x யு.எஸ்.பி. 3.0, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– பேக்லிட் கீபோர்டு
– 70 Wh பேட்டரி
புதிய லெனோவோ யோகா 920 பிளாட்டினம், பிரான்ஸ் மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1,329.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.85,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் இதன் விற்பனை துவங்குகிறது.
லெனோவோ யோகா 720 முக்கிய அம்சங்கள்:
– 12.5 இன்ச் FHD 1920×1080 டிஸ்ப்ளே
– 7-ம் தலைமுறை இன்டெல் கோர்  i3, i5, i7 பிராசஸர்கள்
– இன்டெல் இன்டிகிரேட்டெட் கிராஃபிக்ஸ்
– விண்டோஸ் 10 ஹோம்
– 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி SATA SSD/ 256 ஜிபி SATA SSD/ 512 ஜிபி SATA SSD
– 720 பிக்சல் எச்டி CMOS கேமரா
– டால்பி ஆடியோ கொண்ட ஹார்மன் ஸ்பீக்கர்கள்
– 1 x யு.எஸ்.பி. 3.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– பேக்லிட் கீபோர்டு
– 36Wh பேட்டரி
12-இன்ச் யோகா 720 ஆன்சி பிளாக் மற்றும் மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 649 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.41,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையும் அக்டோபர் மாதத்தில் நடைபெறுகிறது.
லெனோவோ யோகா 720 மாடல் சிறியதாகவும், மெல்லிய வடிவமைப்பு மற்றும் எடை குறைவாக இருக்கிறது.
லெனோவோ Miix 520 அம்சங்கள்:
– 12.2 FHD 1920×1200 IPS டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
– 8-ம் தலைமுறை இன்டெல் குவாட்கோர் i5 பிராசஸர்
– விண்டோஸ் 10 ஹோம்
– 8 ஜிபி ரேம்
– 256 ஜிபி PCIe SSD
– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் வொர்ல்டு வியூ கேமரா
– டால்பி ஆடியோ
– 1 x யு.எஸ்.பி.-சி, 1 x யு.எஸ்.பி. 3.0
– எஸ்.டி. கார்டு ரீடர்
– சிம் கார்டு ஸ்லாட்
– ஆக்டிவ் பென் 2
– பேக்லிட் கீபோர்டு
– 39Wh பேட்டரி
லெனோவோவின் டீடேட்ச் செய்யக்கூடிய Miix 520 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3D இமேஜிங் செய்யக் கூடிய வகையில் வொர்ல்டு வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ Miix 520 விலை 999.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது.