சாம்சங் நிறுவனத்தின் 2018 கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் 2018 கேலக்ஸி ஜெ3 மற்றும் ஜெ7 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களில் 5.0 இன்ச் மற்றும் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018 கேலக்ஸி ஜெ3 ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும் கீக்பென்ச் தளத்தில் வெளியான தகவல்களில் இந்த ...
Read More »குமரன்
டிரம்ப்புடனான சந்திப்பில்நான் கொல்லப்படலாம்! -கிம்
அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் திகதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள். இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் ...
Read More »முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்!- மாவை
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் நேற்று (07) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் இந்த தகவலினை வௌியிட்டுள்ளார். கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயார் எனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...
Read More »பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன்!
அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த வாரம் ...
Read More »வருடத்தின் இறுதிக்குள் தேர்தல்!- எஸ்.பி.திஸாநாயக்க
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறை குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதும் இவ் வருடத்தின் இறுதிக்குள் கால எல்லை முடிவடைந்த அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த தயராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் பதவிகாலமானது கடந்த 2017 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணசபைகளுக்குமான கால எல்லையும் நிறைவுக்கு வரவுள்ளது. ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறுக் கோரி ...
Read More »சினிமா விமர்சனம்: ‘காலா’
நடிகர்கள் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பாடீல், சாயாஜி ஷிண்டே, சம்பத் ராஜ் இசை சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு முரளி. ஜி இயக்கம் பா. ரஞ்சித் கபாலி படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக நடித்திருக்கும் இரண்டாவது படம். மும்பையின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியின் தாதா, கரிகாலன் என்ற காலா (ரஜினிகாந்த்). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்) மற்றும் மகன்களோடு வாழ்ந்துவருகிறார். அந்த குடிசைப் பகுதியை கையகப்படுத்தி, மிகப் பெரிய கட்டுமானத் ...
Read More »இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா: முக்கியத்துவமும் சவால்களும்!
அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ?டெய்லி மிரர்? நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு: *நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம். *கடல் பாதைகளில் ...
Read More »அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை!
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவருக்கே நீதிமன்றம் நேற்று (07.06.2018) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதில் 9 ஆண்டுகள் அவர் கட்டாயம் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் குறித்த இலங்கையர் சென்றிருந்தார். அப்போது தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் ...
Read More »தொப்பி பிரட்டிய சாலிய பீரிஸ்!
எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று தாம் கூறவில்லை என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் கடந்த 2ஆம் நாள் நடந்த, காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நடத்திய கலந்துரையாடலில், எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று சாலிய பீரிஸ் ...
Read More »“காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது“!
இவான் துர்கனேவ் ‘காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது. காதலின் முன் வாழ்வின் வரையறைகள் அர்த்தமற்றவை. வேறெந்த உணர்ச்சிகளுக்கும் பொருளில்லை. காதல், வாழ்வின் ஓர் அங்கமல்ல; காதலே வாழ்வின் முழுமை. நிராகரிப்பின் உச்சத்திலும் அவமானத்தின் கீழ்மையிலும்கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்!’ இவான் துர்கனேவின் வாழ்க்கையில் இருந்து காதலை மேற்சொன்னவாறு புரிந்துகொள்ளலாம். உலக இலக்கியத்தின் எந்தப் பக்கத்திலும் துர்கனேவைப் போலொரு கதாபாத்திரத்தைப் பார்க்க முடியாது. எழுதப்பட்டிருந்தாலும் ஏற்கமுடியாத பாத்திரமாக துர்கனேவ் இருந்திருப்பார். காதல் தனக்கொரு பெயர் சூட்டிக்கொள்ள விரும்பினால் நிச்சயம் இவான் துர்கனேவ் பெயரையே ...
Read More »