நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் 3 தேவாலயங்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. மேலும் 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 இந்தியர்கள் உள்பட 310 ...
Read More »குமரன்
தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்!
இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
Read More »ஃபர்தாவைத் தடைசெய்ய யோசனை!
இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, சிறிகொத்தாவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, முஜிபூர் எம்.பி கூறினார்.
Read More »இலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தனம் – காஜல் அகர்வால்
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டு மிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். லங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் உடல் சிதறி பலியானார்கள், இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ...
Read More »ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு!
இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் இந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி தகர்க்கப்பட்டன. நேற்றும் வான் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. விமான நிலையம் அருகே 6 அடி நீளம் உள்ள பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை விமானப்படை வீரர்களால் செயல் இழக்க செய்யப்பட்டது. இலங்கையை உலுக்கிய இந்த தொடர் ...
Read More »அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா?
மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் (தமிழரசுக் கட்சித் தலைவர்) மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. படை முகாம்கள் அமைப்பதற்கு, மக்களின் காணிகளை அப(சுவீ)கரிப்புச் செய்ய முடியாது என, அங்கு, அவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ...
Read More »சந்தேகத்தின் பேரில் சிரிய நாட்டுப் பிரஜை கைது!
இலங்கையில் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என, ராய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Read More »தாக்குதல்கள் இடம்பெறலாமென காவல் துறை தலைமையகம் எச்சரிக்கை!
நாட்டில் சகல காவல் துறை பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தொடர்ந்து தாக்குதல்தாரிகளால் தாக்குதல்கள் இடம்பெறாமென, காவல் துறை தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவகையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, காவல் துறை தலைமையகம் சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.
Read More »பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள் சில அவசரகால சட்டத்தின் கீழ்…!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள சில, அவசரகால சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலினூடாக இன்று(22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. தேசிய பாதுகாப்புச் சபையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடத்திய அவசரச் சந்திப்பிலேயே ஜனாதிபதி இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
Read More »தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர் !
இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல் துறை பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த 26 பேரில் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், ...
Read More »